UAE அருகில் சவூதி எண்ணெய்க் கப்பல்கள் சேதம்: விசாரணைக்கு ஈரான் வலியுறுத்தல்

0 228

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) அருகில் ஓமான் கடற்பகுதியில் தனது இரு எண்ணெய்க் கப்பல்கள்  சதி நடவடிக்கைகளால் சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜாரியா துறைமுகம் (வைப்பகப்படம்)


இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜாரியா துறைமுகத்துக்கு அருகில் சதித்திட்ட தாக்குதல்களுக்கு 4 வணிகக் கப்பல்கள் இலக்காகின என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேற்று தெரிவித்தது.

பல நாடுகளின் கப்பல்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு இலக்காகியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஓமான் கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஈரான் இன்று வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்துள்ள நிலையில் இக்கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஈரானிடமிருந்து எழுந்துள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக எனக்கூறி, அமெரிக்க போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo