ஜூலியன் அசான்ஜேவுக்கு எதிரான வல்லுறவு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்படும்: சுவீடன் அறிவிப்பு

Sweden reopens rape probe against Assange

0 247
 

விகிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு விவகாரத்தை மீண்டும் விசாரிப்பததற்கு சுவீடன் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

ஜுலியன் அசான்ஜே தம்முடன் தமது சம்மதமின்றி பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொண்டதாக 26 மற்றும் 31 வயதான இரு யுவதிகள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜுலியன் அசான்ஜேவை கைது செய்வதற்கு 2011 ஆம் ஆண்டு சுவீடன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதேவேளை, விக்கிலீக்ஸில் அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தான் சுவீடனுக்குத் திரும்பினால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படக் கூடும் என அசான்ஜே கூறினார்.

அவ்வேளையில் பிரிட்டனில் தங்கியிருந்த அசான்ஜேவை நாடு கடத்தக் கோரி பிரித்தானிய நீதிமன்றத்தில் சுவீடன் அதிகாரிகளால் வழக்குத் தொடரப்பட்டது.

அவர் பிரித்தானிய நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது, 2012 மே 19 ஆம் திகதி லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

2010 ஆம் ஆண்டில் ஜூலியன் அசான்ஜே


அவருக்கான அரசியல் புகலிடத்தை ஈக்குவடோர் விலக்கிக்கொண்டதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் பொலிஸாரால் அசான்ஜே கைது செய்யப்பட்டார். பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதித்து கடந்த முதலாம் திகதி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் ஜுலியன் அசான்ஜே மீதான பாலியல் குற்றசாட்டு விசாரணைகளை மீள ஆரம்பிப்பதற்கு தான் தீர்மாளித்தள்ளதாக சுவீடனின் பிரதி பொது வழக்குத் தொடுனரான ஈவா மேரி பியர்சன் நேற்று தெரிவித்தார்.

இவ்விசாரணைகளை 2017 ஆம் ஆண்டு நிறுத்துவதற்கான முந்தைய (2017 மே) தீர்மானமானத்துக்கு ஆதாரங்கள் இல்லாத சிரமங்கள் காரணமல்ல எனவம், விசாரணைகளை முடக்கிய சிரமங்களே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ஈவா மேரி பியர்சன்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo