மலேஷியாவில் முஸ்லிம் சாராத வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் நால்வர் கைது

Malaysia foils IS-linked plot, seizes explosives

0 199

மலேஷியாவில் முஸ்லிம் சாராத வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிஐந்த ஐ.எஸ். புயங்கரவாத அமைப்பின் 4 பேரை கைது செய்துள்ளதாக மலேஷிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மலேஷியப் பிரஜை எனவும் இருவர் மியன்மாரின் ரோஹிங்யர்கள் எனவும் மற்றொருவர் இந்தோனேஷிய பிரஜை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேஷியத் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தெரென்கனு மாநிலம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளிலேயே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

முக்கிய பிரமுகர்கள் பலரை கொலை செய்வதற்கும் மலேஷியாவிலுள்ள இந்து, கிறிஸ்தவ, பௌத்த வணக்கஸ்தலங்களை தாக்குவதற்கும் இவர்கள் திடடமிட்டிருந்தனர் என மலேஷிய பொலிஸ் தலைமை அதிகாரி அப்துல் ஹமீட் பதோர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்நபர்களிமிருந்து 6 வெடிகுண்டுகள், பிஸ்டல் மற்றும் 15 தோட்டக்காள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo