ஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுக்களை அவிஷ்க நிராகரிக்கிறார்; ஐயத்துக்கு இடமின்றி நிரபராதி எனவும் தெரிவிக்கிறார்

0 73

(நெவில் அன்­தனி)

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்ள இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஏ அணியின் பயிற்­று­ந­ரு­மான அவிஷ்க குண­வர்­தன, எவ்­வித ஐயத்­துக்கும் இட­மின்றி தான் முழு நிர­ப­ராதி எனத் தெரி­வித்தார்.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யி­னால் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை உண்­மைக்கு புறம்­பா­னவை என எஸ்.எஸ்.சி. கேட்­போர்­ கூ­டத்தில் நேற்று பிற்­பகல் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் பேசிய அவிஷ்க குண­வர்­தன தெரி­வித்தார்.அங்கு தொடர்ந்து பேசிய அவிஷ்க குண­வர்­தன, ‘‘ஐ.சி.சி.யின் குற்­றச்­சாட்­டு­களை அடிப்­ப­டை­யா­க­வைத்து எவ்­வித விசா­ர­ணை­களுமின்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனது சேவையை இடை­நி­றுத்­தி­யமை நியா­ய­மற்­றது.

இது குறித்து எனது சட்­டத்­த­ரணி க்ரிஷ்மால் வர்­ண­சூ­ரிய ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் நியாயம் கோர­வுள்ளேன்.
‘‘இன்று வெறு­மனே என் தரப்பு நியா­யங்­களை ம்ட்டுமல்­லாமல் என்­னு­டைய சக கிரிக்கெட் வீரர்கள், பயிற்­று­நர்கள் மற்றும் கய­வர்­களால் பல வருட கால­மாக உழைப்பு திரு­டப்­பட்­டு­வரும் இலங்கை கிரிக்­கெட்டின் விசு­வா­ச­மான சேவகர்கள் பலரின் சார்­பா­கவும் அவர்­களின் நியா­யங்­க­ளையும் எடுத்­துக்­கூ­றவே இந்த ஊடக சந்­திப்பை ஏற்­பாடு செய்­துள்ளேன்’’ என்றார்.

‘‘கிரிக்கெட் விளை­யாட்டில் நான் வைத்­தி­ருக்கும் மதிப்பைப் பற்­றியும் பயிற்­று­ந­ராக எனது கண்­ணியம் பற்­றியும் என்னை அறிந்­த­வர்­க­ளுக்கு நான் கூறத்­தே­வை­யில்லை. நான் 11 வய­தி­லி­ருந்து கிரிக்கெட் விளை­யா­டி­வந்­துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் நான் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எனது பெய­ருக்கோ விளை­யாட்டின் மகத்­து­வத்­துக்கோ களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோத செயல்­க­ளிலும் ஈடு­பட்­ட­தில்­லை எனவும் அவர் கூறினார்.

தனக்கு எதி­ராக ஒரே ஒரு வீரர் மாத்­தி­ரமே ஐ.சி.சி.யிடம் முறைப்­பாடு செய்­த­தாக குறிப்­பிட்ட அவர், அந்த வீர­ரது ஒழுக்கம் தொடர்பில் திருப்­தி­கொள்­ளா­ததால் சில தட­வைகள் அந்த வீரரை குழாத்­தி­லி­ருந்து நீக்­கி­ய­தா­கவும் தெரி­வித்தார்.மேலும் ஐ.சி.சி. தன்னை அணு­கி­ய­தி­லி­ருந்து பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கி­ய­தா­கவம் தனது பிரத்­தி­யேக கைய­டக்கத் தொலை­பேசி, வங்கிக் கணக்­குகள் அனைத்­தையும் சமர்ப்­பித்­த­தா­கவும் அவிஷ்க கூறினார்.

‘‘ஆனால், எனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வ­னாக நிற்­கின்றேன். எனவே எனக்கும் மற்­றைய வீரர்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள அவப்­பெ­ய­ருக்கு எதி­ராக போராட முடி­வெ­டுத்­துள்ளேன். நான் நிர­ப­ராதி என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான விசா­ர­ணை­யா­வது நடை­பெறும் என எதிர்­பார்க்­கின்றேன்.

அநீ­திக்கு எதி­ரான போராட்டம் கடி­ன­மா­னது என்­பதை அறிவேன். ஆனால் இங்­கி­ருந்து நான் பயந்து பின்­வாங்­கப்­போ­வ­தில்லை. அநீ­திக்­கெ­தி­ராக உண்மை வெல்லும் என்ற நம்­பிக்­கை­யுடன் போரா­டுவேன்’’ என்றார். இந்த ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு பேசிய அவிஷ்­கவின் சட்­டத்­த­ரணி க்ரிஷ்மால் வர்­ண­சூ­ரிய, ‘‘அவிஷ்­கவை விசா­ர­ணைக்கு வரு­மாறு ஐ.சி.சி.யின் ஊழல் மோசடித் தடுப்புப் பிரிவு அழைக்­கின்­றது.

ஆனால் போக்­கு­வ­ரத்து செல­வி­னங்­களைத் தர­ம­றுக்­கின்­றது. பணம் கிடைக்­காமல் போகா­விட்டால் தண்­ட­னையும் கிடைக்கும். அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்­பதை உணர்த்­துவோம். அதே­போன்று ஐ.சி.சி. குற்­றச்­சாட்டை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு எவ்­வித விசா­ர­ணை­யு­மின்றி இலங்கை ஏ அணியின் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து அவிஷ்­கவை இடை­நி­றுத்தம் செய்தமை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் ஐந்து தினங்களுக்குள் விளக்கம் கோரியுள்ளேன்’’ என்றார்.

ஐ.சி.சி. குற்­றச்­சாட்டு
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் 2017இல் நடை­பெற்ற பத்து 10 கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது நுவன் சொய்­ஸாவும் அவிஷ்க குண­வர்­த­னவும் விதி­மு­றை­களை மீறி­ய­தாக ஐ.சி.சி. கடந்த வெள்­ளி­யன்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo