பாடசாலைகள் றக்பி லீக் போட்டிகள் அடுத்த மாதம்

0 95

(நெவில் அன்­தனி)

இலங்கை பாட­சா­லைகள் றக்பி லீக் போட்­டி­களை கடும் பாது­காப்­புக்கு மத்­தியில் நடத்­து­வ­தற்கு இலங்கை றக்­பி­ கால்­பந்­தாட்ட சங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. சங்­கத்­துக்கும் பாது­காப்பு அமைச்­சுக்கும் இடையில் அண்­மையில் நடை­பெற்ற விரி­வான பேச்­சு­வார்த்­தை­களின் பல­னாக முடங்கிப் போயுள்ள பாட­சா­லைகள் றக்பி லீக் போட்­டி­களை கொழும்பு சுக­த­தாச அரங்கில் மாத்­திரம் நடத்­து­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு அமைய பெரும்­பாலும் அடுத்த மாதம் முதல் வாரத்­தி­லி­ருந்து பாட­சா­லைகள் றக்பி லீக் இரண்டாம் கட்டப் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.நாட்டில் பாது­காப்பு நிலை­வ­ரத்தில் இப்­போ­தைக்கு உறுதித் தன்மை இல்­லா­ததால்  சுக­த­தாச அரங்கே போட்­டி­களை நடத்த பாது­காப்­பான இடம் என இலங்கை பாட­சா­லைகள் றக்­பி­கால்­பந்­தாட்ட சங்­கமும் பாது­காப்பு அமைச்சும் தீர்­மா­னித்­துள்­ளன.

இரண்டாம் கட்ட றக்பி போட்­டி­களை நடத்­து­வது தொடர்­பாக இலங்கை பாட­சா­லைகள் றக்­பி­கால்­பந்­தாட்ட சங்­கமும் பாது­காப்பு அமைச்சும் இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் ஆராய்ந்­த­போது இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளன.இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான சிங்கர் கிண்ண றக்பி லீக் முதலாம் கட்டப் போட்­டிகள் கடந்த மார்ச் மாதம் நிறை­வுக்கு வந்­தன. இரண்டாம் கட்டப் போட்­டிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்­ப­மா­வ­தாக இருந்­தது.

ஆனால், உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டில் அமைதி சீர்­கு­லைந்­ததால் பல்­வேறு விட­யங்கள் தடைப்­பட்­டன.இப் போட்­டிகள் நடு­நி­லை­யான சுக­த­தாச அரங்கில் நடை­பெ­று­வதால் எந்­த­வொரு பாட­சா­லைக்கும் சொந்த மைதான அனு­கூலம் இல்­லாமல் போகும்.

குவளை, கோப்பை, கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கு­ரிய மூன்று போட்­டிகள் ஒவ்­வொரு நாளும் நடத்­தப்­படும் என இலங்கை பாட­சா­லைகள் றக்­பி­ கால்­பந்­தாட்ட சங்கத் தலைவர் ரஞ்சித் சந்த்­ர­சே­கர தெரி­வித்தார்.போட்­டி­களை விரை­வாக நடத்தி முடிக்கும் வகையில் வாரந்­தோறும் புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஞாயி­று­வரை சுக­ததாச விளை­யாட்­ட­ரங்கை பாட­சாலை றக்பி போட்­டி­களை நடத்­து­வ­தற்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ ஒதுக்­கிக்­கொ­டுத்­துள்ளார்.

மத்­திய மாகாண போட்­டிகள் யாவும் திகன மைதா­னத்தில் தீவிர பாது­காப்­புடன் நடத்­தப்­படும் என சங்கத் தலைவர் மேலும் குறிப்­பிட்டார். சுக­த­தாச அரங்­கிலும் திகன மைதா­னத்­திலும் பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவர் என அவர் கூறினார்.

றோயல் கல்­லூ­ரிக்கும் திரித்­துவ கல்­லூ­ரிக்கும் இடையிலான வருடாந்த இரண்டு கட்ட ப்றட்பி கேடய றக்பி போட்டிகள் சுகததாச அரங்கிலும் திகன மைதானத்திலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது குறித்து இரண்டு பாடசாலைகளும் இதுவரை உறுதிப்பாடு எதனையும் வழங்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo