தீர்மானமிக்க கடைசி தென் ஆபிரிக்கா – பாகிஸ்தான் மகளிர் ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவு

0 51

 

தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் பெனோனி விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெற்ற தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வதும் கடை­சி­யு­மான ஐ.சி.சி. மகளிர் சம்­பி­யன்ஷிப் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்­தது. எலிஸா ரியாஸ் சக­ல­து­றை­க­ளிலும் பிர­கா­சித்த இந்தத் தீர்­மா­ன­மிக்க போட்­டியில் கணி­ச­மான மொத்த எண்­ணிக்­கைகள் பெறப்­பட்­ட­துடன் கடை­சி­வரை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய இப் போட்­டியில் இரண்டு அணி­களும் ஒரே மொத்த எண்­ணிக்­கையைப் பெற்­றன.

மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வர­லாற்றில் சம­நி­லையில் முடி­வ­டைந்த 6ஆவது போட்டி இது­வாகும்.இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட தென் ஆபி­ரிக்க மகளிர் அணி, லிஸெல் லீ, லோரா வுல்வார்ட், சனே லுஸ் ஆகி­யோரின் அரைச் சதங்­க­ளுடன் 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 265 ஓட்­டங்­களைப் பெற்­றது.

துடுப்­பாட்­டத்தில் லுஸ் 84 பந்­து­களில் 80 ஓட்­டங்­க­ளையும் லீ 57 ஓட்­டங்­க­ளையும் வுல்வார்ட் 56 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.
பாகிஸ்தான் மகளிர் பந்­து­வீச்சில் எலியா ரியாஸ் 49 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் மகளிர் அணி, ஜாவே­ரியா கான், எலியா ரியாஸ் ஆகி­யோரின் அரைச் சதங்­களின் உத­வி­யுடன் 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 265 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பாகிஸ்தான் சார்­பாக ஜாவே­ரியா கான் 74 ஓட்­டங்­க­ளையும் எலியா ரியாஸ் 71 ஓட்­டங்­களைப் பெற்­றனர்.தென் ஆபி­ரிக்க மகளிர் பந்­து­வீச்சில் மஸா­பட்டா க்ளாஸ் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: எலியா ரியாஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo