ஆங்கிலேய ப்றீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி மீண்டும் சம்பியனானது

0 79

அமெக்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற தீர்­மானம் மிக்க கடைசி லீக் போட்­டியில் ப்றைட்டன் அணி­யிடம் ஆரம்­பத்தில் சவாலை எதிர்­கொண்டு பின்னர் இல­கு­வாக வெற்­றி­பெற்ற மென்­செஸ்டர் சிட்டி கழகம், லிவர்பூல் கழ­கத்தை ஒரு புள்ளி வித்­தி­யா­சத்தில் பின்­தள்ளி ப்றீமியர் லீக் சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொண்­டது.

இதன் மூலம் ஆங்­கி­லேயே ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்ட வர­லாற்றில் 10 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் அடுத்­த­டுத்த வரு­டங்கள் சம்­பி­ய­னான முத­லா­வது அணி என்ற பெரு­மையை மென்­செஸ்டர் சிட்டி கழகம் தன­தாக்­கிக்­கொண்­டது.

போட்டியின் 27ஆவது நிமி­டத்தில் கோர்ணர் கிக்கைப் பயன்­ப­டுத்தி ப்றைட்டன் சார்­பாக க்ளென் மறே கோல் போட்­டதன் கார­ண­மாக மென்­செஸ்டர் சிட்­டியின் சம்­பியன் கனவு கேள்­விக்­கு­றி­யா­கி­ய­துடன் லிவர்பூல் கழ­கத்­திற்கு சம்­பி­ய­னா­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரித்­தது.

ஆனால் அடுத்த நிமி­டமே மென்­செஸ்டர் சிட்டி சார்­பாக சேர்­ஜியோ அகேரோ கோல்­நி­லையை சமப்­ப­டுத்தி தனது அணியின் சம்­பியன் பட்ட வாய்ப்பை அதி­க­ரிக்கச் செய்தார். தொடர்ந்து 38ஆவது நிமி­டத்தில் அய்­மெரிக் லெப்­போர்ட்டே மேலும் ஒரு கோலைப் போட இடை­வே­ளை­யின்­போது மென்­செஸ்டர் சிட்டி கழகம் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் முன்­னிலை அடைந்­தது.

இடை­வே­ளையின் பின்னர் 17 நிமி­டங்­கள்­வரை இரண்டு அணி­களும் சம அளவில் மோதிக்­கொண்ட வண்ணம் இருந்­தன. இந்­நி­லையில் 63ஆவது நிமி­டத்தில் ரியாத் மஹ்­ரெஸும் 72ஆவது நிமி­டத்தில் ப்றீ கிக் மூலம் கன்­டோ­கனும் கோல்­களைப் போட மென்­செஸ்டர் சிட்டி கழகம் இரண்­டா­வது தொடர்ச்­சி­யான வரு­ட­மாக ப்றீமியர் லீக் சம்­பி­ய­னா­வது உறு­தி­யா­யிற்று.

ப்றீமியர் லீக் போட்­டிகள் நிறைவில் மென்­செஸ்டர் சிட்டி கழகம் 38 போட்­டி­களில் 32 வெற்­றிகள், 2 வெற்­றி­ தோல்வி­யற்ற முடிவுள் மற்றும் 4 தோல்­விகள் என்ற பெறு­பே­று­க­ளுடன் 98 புள்­ளி­களைப் பெற்று சம்­பிய­னா­னது.

லிவர்பூல் கழகம் தனது 38 போட்­டி­களில் 30 வெற்­றிகள், 7 வெற்­றி­ தோல்­வி­யற்ற முடி­வுகள், ஒரு தோல்வி என்ற பெறு­பே­று­க­ளுடன் 97 புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்­றது.

72 புள்­ளி­க­ளுடன் செல்சி கழகம் மூன்றாம் இடத்­தையும் 71 புள்­ளி­க­ளுடன் டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்பர் நான்கம் இடத்தையும் பெற்றன.இந்த நான்கு கழகங்களும் அடுத்த ஐரோப்பியன் சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் இங்கிலாந்திலிருந்து பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo