மியன்மாரில் அரியவகை மான்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டி பவுசர்கள் மூலம் குளங்களை நிரப்பும் அதிகாரிகள்

0 267

மியன்­மாரில் காட்­டி­லுள்ள அரி­ய­வகை மான்­களைப் காப்­பாற்­று­வ­தற்­காக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி சேக­ரித்து, பவு­சர்கள் மூலம் குளங்­களில் தண்ணீர் நிரப்பும் நட­வ­டிக்­கையை உள்ளூர் வன­ஜீவ­ராசித் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆரம்­பித்­துள்­ளனர்.

மியன்­மாரின் மெக்வே பிராந்­தி­யத்­தி­லுள்ள ஷ்வே சேட்டேவ் வன­வி­லங்குச் சர­ணா­ல­யத்தில் அரிய வகை­யான இனத்தைச் சேர்ந்த மான்கள் உள்­ளன. சுமார் 1000 மான்கள் அங்கு உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது அப்­பி­ராந்­தி­யத்தில் கடும் உஷ்ணம் நில­வு­கி­றது. சுமார் 47 பாகை செல்­சியஸ் அளவில் வெப்­ப­நிலை உள்­ளது.
இதனால், அச்­ச­ர­ணா­ல­யத்­தி­லுள்ள சுமார் 20, குளங்­களில் நீர் வற்றிப் போயுள்­ளது.

நீருக்­காக அய­லி­லுள்ள கிரா­மங்­க­ளுக்குச் செல்லும் மான்கள் வேட்­டை­யா­டப்­படும் ஆபத்தை எதிர்­கொண்­டன.

இதை­ய­டுத்து, கடந்த மாத இறு­தியில் வன ஜீவ­ரா­சிகள் துறை அதி­கா­ரிகள் தாமே நிதி சேக­ரித்து ஆற்று நீரை பவு­சர்கள் மூலம் கொண்­டு­வந்து குளங்­களை நிரப்பத் தீர்­மா­னத்­தனர்.

ஆனால், இந்­நிதி போது­மா­ன­தல்ல என்­பதை உணர்ந்த அதி­கா­ரிகள், பேஸ்புக் சமூக வலைத்­தளம் மூலம் பொது­மக்­க­ளிடம் நிதி உதவி கோரினர்.

இத்­திட்­டத்­துக்கு பொது­மக்­களின் ஆத­ரவு கிடைத்து.

சில தினங்­க­ளி­லேயே ஒரு மில்­லியன் கியாத் (சுமார் 117,000 ரூபா) நிதி சேக­ரிக்கப்­பட்­டது என வன இலாகா அதி­காரி தியென் லிவின் தெரிவித்துள்ளார்.

சுமார் 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஆற்றிலிருந்து நீரை பவுசரில் கொண்டுவந்து குளங்கள் நிரப்பப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo