நியூஸி. பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா.செயலாளர் நாயகம் நேரில் சந்தித்தார்

UN Secretary General Antonio Guterres meets New Zealand mosque victims

0 191

நியூஸிலாந்தின் பள்ளிவாசல்கள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சமபவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் இன்று நேரில் சந்தித்தார்.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்க் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி வெள்ளையின மேலாதிக்கப் பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 பேர் பலியானதுடன் மேலும் 49 காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் இடம்பெற்ற பள்ளிவாசல்களில் ஒன்றான அல் நூர் பள்ளிவாசலுக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் இன்று விஜயம் செய்தார்.

‘காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்துவத்றககாக தென் பசுபிக்குக்கு அன்டோனியோ குட்டெரஸ் விஜயம் மேற்கொண்டுள்ளார். எனினும், ரமழான் காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

‘இந்த வேதனை மற்றும் துன்பத்தை போக்குவதற்கான வார்த்தைகள் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால், அன்பையும், ஆதரவையும், தெரிவிப்பதற்காக நான் நேரடியாக இங்கு வர விரும்பினேன்’ என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

அதேவேளை, வெறுப்புணர்வானது இணையத்தில் காட்டுத் தீ போன்று பரவுவதாகவும் அவர் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo