அயோக்யா’வில் நடித்தது குறித்து விஷால்

0 264

கடந்த வாரம் வெளியான ‘அயோக்யா’வில் நடித்ததற்கான காரணம் என்ன என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார். வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

முதலில் ‘டெம்பர்’ ரீமேக்கில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பிறகு விஷால் நடிக்க இப்படம் தொடங்கப்பட்டது. இப்படத்தில் நடித்திருப்பது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு விஷால் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் ரீமேக் படத்தில் நடித்தால் ரெண்டு மாநிலங்களில் வியா­­பா­ரத்தை தவறவிடுகிறேன். ‘அயோக்யா’ படத்தை நான் ஒப்புக்கொண்ட காரணம் அந்தக் கதை மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதுதான்.

இந்தப் படம் பாலியல் பலாத்கார வழக்குக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நிஜத்தில் அந்த குற்றத்துக்கான தண்டனை மிகக் குறைவே. இந்த விஷயத்துக்காக மட்டுமே நான் இந்தப் படத்தை ஒப்புக­்­கொண்டேன். இல்லையென்றால் நடித்திருக்க மாட்டேன். ’டெம்பர்’ ரீமேக் என்றாலும் ’அயோக்யா’ வித்தியாசமாக இருக்கும். ’டெம்பர்’ படத்­தின் மற்ற ரீமேக்கில் இருக்கும் க்ளைமேக்ஸ் ’அயோக்யா’வில் கிடையாது.

நான் ஜூனியர் என்.டி.ஆர் நடித்தது போல நடிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது கண்டிப்பாக ஒழுங்காக இருக்காது. ரீமேக்காக இருக்கும் போது தயாரிப்பு சுலபம். முதல் நாளிலிருந்தே உங்கள் கதாபாத்திரம் என்ன, எப்படி உணர்ச்சிகளை காட்ட வேண்­டும் என்பதெல்லாம் தெரியும்.

ஆனால் என்.டி.ஆர் செய்ததை அப்ப­டியே பிரதி எடுத்து என்னால் செய்ய முடியாது. எனக்கு எந்த அளவு வருமோ அப்படி நான் செய்திருக்கிறேன். இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!