முன்புற சக்கரம் இயங்காத நிலையில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய விமானி

0 258

89 பேருடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மியன்மார் விமா­ன­மொன்றின் முன்­சக்­கரம் இயங்­காத நிலையில், அவ்­வி­மா­னத்தை பாது­காப்­பாக விமானி தரை­யி­றக்­கி­யுள்ளார். மியன்­மாரின் மண்­டாலே நகரில் நேற்­று­  இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மியன்மார் எயார்­லைன்­ஸுக்குச் சொந்­த­மான பிளைட் யூ.பீ. 103 எனும் இவ்­வி­மானம் தலை­நகர் யாங்­கூ­னி­லி­ருந்து மாண்­டலே நகரை சென்­ற­டைந்­த­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. எம்­பரர் 190 ரகத்தைச் சேர்ந்த இவ்­வி­மா­னத்தில் 7 ஊழி­யர்கள் உட்­பட 89 பேர் இருந்­தனர். மாண்­டலே நகரில் இவ்­வி­மா­னத்தை தரை­யி­றக்க முற்­பட்­ட­போது, விமா­னத்தின் முன்­புற சச்­கரம் விமா­னத்­தி­லிந்து வெளி­வ­ர­வில்லை.

முன்­புற சக்­கரம் வெளி­வந்­து­விட்­டதா என்­பதை அதி­கா­ரிகள் அவ­தா­னிப்­ப­தற்­காக அவ்­வி­மானம் இரு தட­வைகள் விமான நிலை­யத்தைச் சுற்றி வட்­ட­மிட்­டது. எனினும் பலன் கிடைக்­க­வில்லை.அதை­ய­டுத்து, பின்­புற சக்­க­ரங்­களின் மூல­மாக மாத்­திரம் அவ்­வி­மானம் தரை­யி­றக்­கப்­பட்­டது.

இவ்­வி­மா­னத்தை திற­மை­யான முறையில் விமானி தரை­யி­றக்­கினார். இச்­சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை என மியன்மார் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பணிப்­பாளர் நாயகம் யே ஹ்டட் ஆங் தெரி­வித்­துள்ளார்.
மேற்படி விமானத்தை சோதனையிடுவதற்காக மாண்டலே நகருக்கு பொறியியலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo