வரலாற்றில் இன்று மே 14 : 1948 இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது, அரபு – இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம்

0 125

1607: அமெ­ரிக்­காவில் இங்கிலாந்தின் முத­லா­வது நிரந்­தர குடி­யேற்ற நக­ராக வேர்­ஜீ­னியா மாநி­லத்தின் ஜேமஸ்­டவுன் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1610: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னன் படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து 13 ஆம் லூயி மன்னன் ஆட்­சிக்கு வந்தான்.

1643: பிரான்ஸில் 13 ஆம் லூயி மன்னன் இறந்­த­தை­ய­டுத்து 4 வய­தான அவரின் மகன் 14 ஆம் லூயி மன்­ன­ரானான்.

1796: அம்மை நோய்க்­கான தடுப்பு மருந்தை எட்வர்ட் ஜென்னர் முதல் ­த­ட­வை­யாக பயன்­ப­டுத்­தினார்.

1807: சுவீ­டனில் அனை­வ­ருக்கும் வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

1870: நியூஸிலாந்தில் முத­லா­வது றக்பி போட்டி நடத்­தப்­பட்­டது.1879: பிஜி நாட்டை 463 பேர் கொண்ட முத­லா­வது இந்­திய தொழி­லாளர் குழு சென்­ற­டைந்­தது.

1929: இங்­கி­லாந்து கிரிக்கெட் வீரர் வில்­பிரெட் வூல்வ், முதல் தரப் போட்­டி­களில் தனது 4000 ஆவது விக்­கெட்டை கைப்­பற்­றினார். (இவர் முதல்­தரப் போட்­டி­களில் மொத்த­மாக 4204 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ளார்)

1939: பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி 5 வயதில் தாயானாள். மருத்­துவ வர­லாற்றில் மிக இளம் தாயாக இச்­சி­றுமி பதி­வு­செய்­யப்­பட்­டுள்ளாள்.

1948: இஸ்ரேல் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. இஸ்­ரேலின் முத­லா­வது பிர­த­ம­ரான டேவிட் பென் கூரியன், சுதந்­தி­ரப்­பிர­க­ட­னத்தை அறி­வித்தார். அதை­ய­டுத்து இஸ்ரேல் மீது அரபு நாடுகள் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன.

1951: தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்ற தேர்­தலில் கறுப்­பி­னத் த­வர்­களின் வாக்­கு­களை அந்­நாட்டு அர­சாங்கம் கணக்­கி­லெ­டுக்­காமல் ஒதுக்­கி­யது.

1955: வோர்ஸோ ஒப்­பந்­தத்தில் சோவியத் யூனியன் முத­லான 8 கம்யூனிஸ நாடுகள் கையெ­ழுத்­திட்­டன.

1963: ஐ.நாவில் குவைத் இணைந்­தது.

1973: அமெ­ரிக்­காவின் முத­லா­வது விண்­வெளி நிலை­ய­மான ஸ்கைலேப் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.

1987: பிஜி நாட்டில் கேர்ணல் ரபுக்கா தலை­மையில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது.

1988: அமெ­ரிக்­காவில் பஸ் சார­தி­யொ­ருவர் மதுபோதையில் தவறான பாதையில் பஸ்ஸை செலுத்தியபோது இடம்பெற்ற விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

2012: நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo