இலங்கை வன்முறைகள் தொடர்பில் ஐ.நா அவதானம்

0 193

(நா.தனுஜா)

இலங்கை பல்­வ­கை­மைத்­தன்மை கொண்­ட­தொரு நாடாகும். இலங்­கையர் என்ற அடை­யாளம் பௌத்தர்,  இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவம் ஆகிய அனைத்­தையும் உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றது. இந்த அனைத்து மதத்­த­வரும் தமது மதத்தை சுதந்­தி­ர­மாகப் பின்­பற்­று­வ­தற்கும், பாது­காப்­பாக வாழ்­வ­தற்கும் உரித்­து­டை­ய­வர்கள் என்று இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. எனவே,  ஒவ்­வொ­ரு­வரும் மற்­றை­ய­வ­ருக்கு மதிப்­ப­ளித்து செயற்­பட வேண்டும் என்று இலங்­கை­யர்கள் அனை­வ­ரையும் கேட்­டுக்­கொள்­கின்றோம் என்று ஐக்­கிய நாடுகள் சபை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

இன அழிப்­பிற்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் தாப­னத்தின் சிறப்பு ஆலோ­சகர் அடமா டயெங் மற்றும் பாது­காப்புப் பொறுப்­பிற்­கான ஐக்­கிய நாடுகள் தாப­னத்தின் சிறப்பு ஆலோ­சகர் கரென் ஸ்மித் இணைந்து வெளி­யிட்­டுள்ள செய்­தி­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளனர்.

“இலங்­கையில் அதி­க­ரித்­து­வரும் மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வன்­மு­றை­களால் வடமேல் மாகா­ணத்தில் வீடுகள், வணக்­கத்­த­லங்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களை இலக்­கு ­வைத்து இடம்­பெற்­றுள்ள தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கிறோம்.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டின் சில பிர­தே­சங்­களில் இத்­த­கைய வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இவை ஆசியப் பிராந்­தி­யத்தில் அதி­க­ரித்­து­வரும் அடிப்­ப­டை­வாத போக்­கையும், மத அடிப்­ப­டை­யி­லான சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்­கான பாது­காப்­பற்ற தன்­மை­யையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

இத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு அர­சாங்கம், எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூக அமைப்­புக்கள் மற்றும் பாது­காப்­புத்­துறை ஆகிய அனைத்தும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இந்­நி­லை­மையை சரி­யான முறையில் கையா­ளா­து­விடின், இந்த வன்­முறைச் சம்­ப­வங்கள் மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது.

எனினும் பாதிக்­கப்­பட்ட தரப்­பிற்குப் பாது­காப்பு வழங்கல், பொய்­யா­கவும் வன்­மு­றையைத் தூண்டும் வகை­யிலும் வெளி­யி­டப்­படும் தக­வல்கள் என்­பன தொடர்பில் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட உட­னடி நட­வ­டிக்­கைகள் பாராட்­டப்­பட வேண்­டி­யவை. அதே­வேளை இந்தத் தாக்­கு­தல்கள் மற்றும் இத­னை­யொத்த வகையில் கடந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தையும், குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வ­தையும் அர­சாங்கம் உறு­தி­செய்ய வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo