ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண் இலத்திரனியல் பொருட்களுடன் யாழில் கைது

0 176

                                                                                                                                                (மயூரன்)
இலத்திரனியல் பொருட்களுடன் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண் ஒருவரை இன்று (15) காலை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயிலில் சென்ற பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார். அவரை விசாரணை செய்து அவரது உடைமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது அவரிடம்  காணப்பட்ட சில இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர். இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!