முழங்காலில் இரத்தக் கசிவுடன் துடுப்பெடுத்தாடிய வொட்சனுக்கு போட்டி முடிவில் 6 தையல்கள்

0 132

மும்பை இண்­டியன்ஸ் அணிக்கு எதி­ராக ஹைத­ரா­பாத்தில் நடை­பெற்ற இண்­டியன் ப்றீமியர் லீக் இறுதிப் போட்­டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் சக வீரர் ஷேன் வொட்சன் முழங்­காலில் இரத்தக் கசி­வுடன் துடுப்­பெ­டுத்­தா­டி­ய­தாக ஹர்­பஜன் சிங் தனது இன்ஸ்­டக்­ராமில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

‘‘அவ­ரது முழங்­காலில் இரத்தம் கசி­வதை உங்­களால் பார்க்க முடி­கின்­றதா? போட்­டியின் பின்னர் அவ­ரது முழங்­காலில் ஆறு தையல்கள் போடப்­பட்­டன. தாவிப் பாய்ந்­த­போது அவ­ரது முழங்­காலில் காயம் ஏற்­பட்­டது. ஆனால் அதனை யாரி­டமும் கூறாமால் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டினார். அவர் எமது @srwatson33.

கடந்த இரவில் எமது அணியை வெற்­றியை அண்­மிக்கச் செய்தார்’’ என இன்ஸ்­டக்­ராமில் ஹர்­பஜன் சிங் குறிப்­பிட்­டுள்ளார்.
சன்­ரைசர்ஸ் ஹைத­ரா­பாத்­துக்கு எதி­ராக 2018இல் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் அபார சதம் குவித்த ஷேன் வொட்சன், சென்னை சுப்பர் கிங்ஸ் சம்­பி­ய­னா­வ­தற்கு பெரும் கார­ண­மாக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ் வருடம் மும்பை இண்­டி­யன்­ஸு­ட­னான போட்­டியின் 16ஆவது ஓவரில் லசித் மாலிங்­கவை அவர் பதம் பார்த்­ததன் மூலம் சென்னை கிங்ஸ் அணிக்கு நம்­பிக்கை ஊட்­டி­யி­ருந்தார். ஆனால் இறு­தியில் ஒரு ஓட்­டத்தால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து கிண்ணத்தை பறிகொடுத்தது. அப் போட்டியில் வொட்சன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo