எம்.சி.ஏ. எவ். பிரிவு கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அனுசரணை

0 83

(நெவில் அன்­தனி)

வர்த்­தக கிரிக்கெட் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இவ் வரு­டத்­துக்­கான எவ். பிரிவு 25 ஓவர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்­டிக்கு பெயார் பெர்ஸ்ட் இன்­சூரன்ஸ் லிமிட்டெட் மீண்டும் அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது. இந்த சுற்றுப் போட்டி ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வி­ருந்­த­போ­திலும் உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் கார­ண­மாக பிற்­போ­டப்­பட்டு கடந்த 11ஆம் திகதி 18 போட்­டி­க­ளுடன் ஆரம்­ப­மா­னது.

இவ் வருடம் 28 வர்த்­தக நிறு­வன அணிகள் பங்­கு­பற்­று­வ­துடன் கேஷ் வெகன் என்ற நிறு­வனம் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­று­கின்­றது. வழ­மைபோல் இந்த சுற்றுப் போட்டி இரண்டு கட்­டங்­களைக் கொண்­டது. வழ­மைபோல் இவ் வருடப் போட்டி லீக் மற்றும் நொக் அவுட் ஆகிய இரண்டு முறை­களில் நடத்­தப்­படும்.

லீக் சுற்றில் 84 போட்­டி­களும் நொக் அவுட் சுற்றில் 15 போட்­டி­களும் நடத்­தப்­படும்.லீக் சுற்றை ஜுன் மாதம் 22ஆம் நிறை­வு­செய்­யவும் நொக் அவுட் சுற்றில் முன்­னோடி கால் இறுதிப் போட்­டி­களை ஜுலை 6ஆம் திகதி ஆரம்­பிக்­கவும் ஏற்­பாட்­டா­ளர்கள் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

லீக் சுற்றில் அதி­சி­றந்த துடுப்­பாட்ட வீரர், அதி­சி­றந்த பந்­து­வீச்­சாளர், தொடர் நாயகன் ஆகிய விரு­துகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் நொக் அவுட் சுற்றின் இறுதிப் போட்டி நாய­க­னுக்கும் விருது காத்­தி­ருக்­கின்­றது. இந்தச் சுற்றுப் போட்­டிக்­கு­ரிய அனு­ச­ர­ணையை வர்த்­தக கிரிக்கெட் சங்­கத்தின் தலைவர் ரொஷான் இத­மல்­கொ­ட­விடம் பெயார்பெர்ஸ்ட் இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான கலா­நிதி சஞ்சீவ் ஜா உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கினார்.

பங்­கு­பற்றும் அணிகள்
குழு ஏ: ஏஷியா கெப்­பிட்டல், அலியான்ஸ் இன்­சூரன்ஸ், எச்.எஸ்.பி.சி. ஷசி|, மாஸ் க்றீடா, மெக்­லெரன்ஸ் குறூப், சொவ்ட் லொஜிக் லைவ், பெயார்பெர்ஸ்ட் இன்­சூரன்ஸ்.

குழு பி: ஏ.எம்.டபிள்யூ., யூனியன் வங்கி, மாஸ்ட் இண்­டஸ்ட்­ரியல், சவுத் ஏஷியா கேட்வே டேர்­மினல், ஸ்லாம் சிட்டி சிமென்ட், அன்செல் டெக்ஸ்டைல்ஸ், ரெஜ்னிஸ் அப்­லை­யன்ஸ்சஸ்.

குழு சி: லயன் ப்றூவரி, ஜோன் கீல்ஸ் ஷசி, ஜன­சக்தி லைவ், யுனைட்டட் ட்ரெக்டர், கோர்ட்டோல்ட்ஸ் க்லோதிங், கேஷ் வெகன், அஸ்ட்ரன் லிமிட்டெட்.

குழு டி: ஏவரி டெனிசன், கார்கில்ஸ் வங்கி, கொமர்ஷல் க்ரெடிட் ஷசி, ப்ரெண்டிக்ஸ் எசென்ஷல்ஸ் ஷபி, எச்.என்.பி. ஷபி, டெக்னோமெடிக்ஸ், யூனியன் அஷுவரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo