ஐ.பி.எல். மகளிர் கிரிக்கெட்டில் சுப்­பர் ­நோவாஸ் சம்பியன்

0 137

இந்­தி­யாவில் நடத்­தப்­பட்ட மகளிர் (ஐ.பி.எல்.) இரு­பது 20 செலஞ் கிரிக்கெட் போட்­டியில் ஹார்­மன்ப்ரீத் கோர் தலை­மை­யி­லான சுப்­பர்­நோவாஸ் அணி கடைசிப் பந்தில் வெலோ­சிட்டி அணியை 4 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்டு சம்­பியன் ஆனது. 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய வெலோ­சிட்டி அணி 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 121 ஓட்­டங்­களைப் பெற்­றது. 122 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய சுப்­பர்­நோவா அணி 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 125 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

வெற்­றி­பெ­று­வ­தற்கு கடைசி ஓவரில் 7 ஓட்­டங்கள் தேவைப்­பட்ட நிலையில் அணித் தலைவி ஹார்­மன்ப்ரீத் கோர் இரண்­டா­வது பந்தில் ஆட்­ட­மி­ழக்க நான்கு பந்­து­களில் வெற்­றிக்கு தேவை­யான ஓட்­டங்கள் ஏழா­கவே இருந்­தது.

அந்த சந்­தர்ப்­பத்தில் களம் நுழைந்த 19 வய­தான ராதா யாதவ் தான் எதிர்­கொண்ட முதல் மூன்று பந்­து­களில் இரட்­டை­க­ளாக 6 ஓட்­டங்­களைப் பெற்று எண்­ணிக்­கையை சமப்­ப­டுத்­தினார். கடைசிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்­பட்ட நிலையில் நியூ­ஸி­லாந்தின் அமே­லியா கேரின் கடைசிப் பந்தை பவுண்ட்­றிக்கு நேராக அடித்த ராதா யாதவ் தனது அணி சம்­பி­ய­னா­வதை உறுதி செய்தார்.

இந்தச் சுற்றுப் போட்­டியில் மூன்­றா­வது அணி­யாக ட்ரெய்ல்ப்­லேஸர்ஸ் பங்­கு­பற்­றி­யது.
இறுதிப் போட்டி எண்­ணிக்கை சுருக்கம்

வெலோ­சிட்டி 20 ஓவர்­களில் 121 – 6 விக். (சுஷ்மா வேமா 40 ஆ.இ., அமே­லியா கேர் 36, லீ தஹுஹு 21 – 2 விக்.)
சுப்­பர்­நோவா 20 ஓவர்­களில் 125– 6 விக். (ஹார்­மன்ப்ரீத் கோர் 51. ப்ரியா பூனியா 29. ஜெமிமா ரொட்றிகஸ் 22, ராதா யாதவ் 10 ஆ.இ., ஜஹானாரா அலாம் 21 – 2 விக்., அமேலியா கேர் 29–2 விக்.) 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo