இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள் கத்தாரில் பயிற்சி

0 108

(நெவில் அன்­தனி)

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம், 2023 ஆசிய கிண்ண கால்­பந்­தாட்டம் ஆகிய இரண்டு போட்­டி­க­ளுக்கும் ஏக­கா­லத்தில் நடை­பெறும் ஆசிய வல­யத்­துக்­கான முன்­னோடி தகு­திகாண் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை, கத்­தாரில் விசேட பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக அங்கு சென்­றுள்­ளது.

கத்தார் சென்­றுள்ள முன்­னோடி இலங்கை கால்­பந்­தாட்ட குழாத்தில் 31 வீரர்கள் இடம்­பெ­று­கின்­றனர்.கத்தார் கால்­பந்தாட் சங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இன்று முதல் எதிர்­வரும் 25ஆம் திக­தி­வரை பயிற்­சி­களில் ஈடு­படும் இலங்கை அணி அங்­கி­ருந்து லாஓஸ் செல்­ல­வுள்­ளது.

லாஓஸ் அணிக்கு எதி­ராக எதிர்­வரும் 28ஆம் திக­தியும் 31ஆம் திக­தியும் சிநே­க­பூர்வ சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் இலங்கை விளை­யா­ட­வுள்­ளது.அதனைத் தொடர்ந்து மெக்கௌ அணிக்கு எதி­ரான முதலாம் கட்ட முன்­னோடி தகு­திகாண் போட்டி ஜூன் 6ஆம் திகதி மெக்­கௌ­விலும் இரண்டாம் கட்ட தகு­திகாண் போட்டி ஜூன் 11ஆம் திகதி கொழும்­பிலும் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்த இரண்டு கட்டப் போட்­டி­க­ளிலும் இலங்கை அணியை வெற்­றி ­பெறச் செய்­வது பயிற்றுர் பக்கீர் அலியின் கடமை என இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா தெரி­வித்தார்.இம்­முறை எவ்­வித சாக்­கு­போக்கும் சொல்­வ­தற்கு பயிற்­றுநர் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்டார்.

முன்­னோடி தகு­திகாண் சுற்றில் இலங்கை அணியை வெற்­றி­பெறச் செய்தால் அடுத்த மூன்று வரு­டங்­களில் சர்­வ­தேச போட்­டிகள் பல­வற்றில் விளை­யா­டு­வ­தற்­கான வாய்ப்பு எமக்கு கிடைக்கும். எனவே என்ன விலை கொடுத்­தேனும் இலங்கை அணியை வெற்­றி­பெறச் செய்­வது பயிற்­று­நரின் கடமை என சம்­மே­ளனத் தலைவர் கூறினார்.

வெற்­றியை இலக்­காகக் கொண்டே இங்­கி­லாந்தில் சசெக்ஸ் பிராந்­தி­யத்தில் ஈஸ்ட்பெர்ன் பரோ கழ­கத்தைச் சேர்ந்த­ வரும் இல­ஙகை தாயார் ஒரு­வ­ருக்கு பிறந்­த­வ­ரு­மான மார்வின் ஹெமில்­டனை குழாத்தில் இணைத்­துக்­கொண்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

ஹெமில்டன் தனது சொந்த செல­வி­லேயே இலங்கை குழாத்தில் இணைந்­துள்­ள­தா­கவும் அவர் திற­மை­சா­லி­யாக இருந்தால் இறுதி குழாத்தில் சேர்க்­கப்­ப­டுவார் எனவும் அநுர டி சில்வா தெரி­வித்தார்.

இலங்கை குழாம்
கோல் காப்­பா­ளர்கள்: சுஜான் பெரேரா (தலைவர்), ராசிக் ரிஷாத், மொஹமத் லுத்பி, மொஹ­மது இஷான்.

பின்­க­ள­வீ­ரர்கள்: மனரம் பெரேரா, சரித்த ரத்­நா­யக்க, டக்சன் பியூஸ்லஸ், நிக்­கலஸ் ஹர்ஷ, ஜூட் சுபன், விமுக்தி மதுமல், சலன சமீர, மொஹமத் வசீத், உதய கீர்த்­தி­கு­மார, காலித் அமில்.

மத்­திய கள வீரர்கள்: கவிந்து இஷான் (உதவித் தலைவர்),  மரி­யதாஸ் நிதர்சன், சசங்க டில்­ஹார, மொஹமத் முஸ்தாக், சுந்­த­ரராஜ் நிரேஷ், மொஹமத் இஜாஸ், மீரா­சாஹிப் இஸ்­ஸதீன், சகா­ய­ராஜா ரோச், மதுஷான் டி சில்வா, நவீன் ஜூட், செபஸ்தியாம்பிள்ளை ஜேசுதாசன், மார்வின் ஹெமில்டன்.

முன்கள வீரர்கள்: மொஹமத் பைசால், மொஹமத் ஷபீர், மொஹமத் ஷஹீல், மொஹமத் ஆக்கிப், டிலிப் சுராஜ் பீரிஸ்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo