மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரானார் சானா மிர்

0 165

மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய சுழல்­பந்­து­வீச்­சாளர் என்ற சாத­னைக்கு பாகிஸ்­தானின் சானா மிர் சொந்­தக்­கா­ர­ரானார்.

பெனோ­னியில் ஞாயி­றன்று நடை­பெற்ற மூன்­றா­வதும் கடை­சி­யு­மான ஐ.சி.சி. மகளிர் சம்­பி­யன்ஷிப் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்க வீராங்­கனை சுனெ லுஸ்ஸின் விக்­கெட்டைக் கைப்­பற்­றி­யதன் மூலம் இந்த சாத­னைக்கு மிர் சொந்­தக்­கா­ர­ரானார்.

118ஆவது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய சானா மிர், 147ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்­றி­யதன் மூலம் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய சுழல் ­பந்­து­வீச்­சாளர் ஆனார்.

மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­தி­ய­வர்கள் வரி­சையில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான இந்­தி­யாவின் ஜூலான் கோஸ்­வாமி (218), அவுஸ்­தி­ரே­லி­யாவின் கெத்­தரின் பிட்ஸ்­பெட்ரிக் (180) ஆகி­யோ­ருக்கு அடுத்­த­தாக மூன்­றா­வது இடத்தில் சானா மிர் இடம்­பெ­று­கின்றார்.

இதற்கு முன்னர் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான மேற்­கிந்­தியத் தீவு­களின் அனிசா மொஹமத், அவுஸ்­தி­ரே­லி­யாவின் லீசா ஸ்தாலேக்கர் ஆகிய இரு­வரும் தலா 146 விக்­கெட்­க­ளுடன் மூன்றாம் இடத்தில் இருந்­தனர்.

மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களில் உய­ரிய இடத்தை அடைந்­தமை பெருமை தரு­வ­தாக சானா மிர் தெரி­வித்தார். எ­னது இந்தச் சாதனை மூலம் மகளிர் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்­தானின் தேசிய கொடி உயரே பறக்­கின்­றது.

நான் கிரிக்கெட் விளை­யாட ஆரம்­பித்­த­போது உய­ரிய இடத்தை அடைவேன் என நான் ஒரு­போதும் எண்­ணி­ய­தில்லை. அப் போட்­டியில் நாங்கள் வெற்­றி­பெற்­றி­ருந்தால் சந்­தோ­ஷப்­பட்­டி­ருப்பேன்.

ஆனால் அப் போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்­தது. அது ஒரு­வ­கையில் நல்ல முடி­வுதான் என்றார் 33 வய­தான சானா மிர். மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 2005இல் தனது 20ஆவது வயதில் அறி­மு­க­மான சானா மீர் பல சவால்­களைக் கடந்­து­வந்து இன்று உய­ரிய நிலையை அடைந்­துள்ளார்.

­எ­னது தந்­தையார் இரா­ணு­வத்தில் கட­மை­யாற்­றினார். இதன் கார­ண­மாக அடிக்­கடி பல இடங்­க­ளுக்கு நகர வேண்டி இருந்­தது. இதனால் அதிக நண்­பர்கள் கிடைக்­க­வில்லை. அதே­வேளை, எனது கிரிக்கெட் திற­மையை, ஆற்­றலை தொடர்ந்து வெளிப்­ப­டுத்தி வந்தேன் என்றார் அவர்.

வீதி கிரிக்­கெட்­டி­லி­ருந்து மைதான கிரிக்­கெட்­டுக்கு மாறி கடை­சி­யாக பாகிஸ்தான் சீருடை யில் சர்வதேச அரங்குகளில் விளை யாடுவதென்பது மகத்தான பெரு மையாகும். அங்கிருந்து எனது இலக்குகள் நிறைவேறியதுடன் அரங்கில் சிறந்த பெறுதிகளைப் பதிவுசெய்ய வைத்தது எனவும் சானா மிர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo