கராச்சியில்தான் இருபது 20 கிரிக்கெட் அறிமுகமானது- ஷஹித் அப்­றிடி

0 169

இரு­பது 20 கிரிக்கெட் போட்டி முறை­மையை கண்­டு­பிடித்­ தது கராச்சி என பாகிஸ்­தானின் முன் னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஷஹித் அப்­றிடி தெரி­வித்­துள்ளார்.

ஷஹித் அவ்­றி­டியின் சுய­ச­ரிதை வெளி­யா­னது முதல் அவர் தொடர்­பான மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்­பான பல்­வேறு விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்த வண்ணம் உள்­ளன.

அவ­ரது சுய­ச­ரி­தையில் இரு­பது ஓவர் கிரிக்கெட் எவ்­வாறு அறி­மு­க­மா­னது என்­பது குறித்தும் குறிப்­பிட்­டுள்ளார்.சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் இரு­பது 20 ஓவர் கிரிக்கெட் போட்­டிகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­ததால் தனது இளமைக் காலத்தில் 14 வய­துக்­குட்­பட்­ட­வர்­களும் 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாட வேண்டி நேரிட்­ட­தாக தனது புத்­த­கத்தில் அவ்­றிடி குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் கராச்­சியின் ரமழான் கிரிக்கெட் அரங்கில் அவ்­வகை கிரிக்கெட் பொது­வாக பின்­பற்­றப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார். இரு­பது 20 கிரிக்கெட் மிகவும் பழை­மை­யான போட்டி எனவும் கராச்­சியில் முதலில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு ரமழான் காலத்தில் இரவு வேளை­களில் இப் போட்டி அறி­மு­க­மா­ன­தா­கவும் அவ்­றிடி கூறி­யுள்ளார்.

இவ்­வகை கிரிக்கெட் போட்டி அடுத்­த­டுத்து வந்த தலை­மு­றை­யினர் மத்­தியில் பிர­பல்யம் பெற்­று­வந்­துள்­ள­துடன் 1980களில் கராச்­சியில் ஆரம்­ப­மான இப் போட்டி நாடு முழு­வதும் விரை­வாக வியா­பித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ‘‘இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் வேகமும் விறு­வி­றுப்பும் இருக்­கின்­றன.

ஒவ்­வொரு பந்­து­வீச்­சின்­போதும் ஏதோ ஒரு வியத்­தகு விடயம் நடக்­கின்­றது. ஒவ்­வொரு இரு­பது ஓவர்கள் நிறை­வ­டையும் போது போட்­டியின் முடிவும் விரை­வாக கிடைத்து விடு­கின்­றது. ரமழான் காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் இத்தகைய போட்டியை ஏற்பாடு செய்வது இலகுவானதாகும்’’ என தனது சுயசரிதையில் அவ்றிடி தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo