ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கலின் விமானத்துடன் மோதிய வேன்!

விமானத்தை படம்பிடிக்க விரும்பிய வேனின் சாரதி ஹேண்ட் பிறேக்கை அழுத்தாமல் வெளியேறியதால் விபத்து

0 278

ஜேர்­ம­னியின் சான்ஸ்லர் ஏஞ்­சலா மேர்கல் பயன்­ப­டுத்தும் அரச விமா­னத்­துடன் வேன் ஒன்று மோதி­யதால் அவ்­வி­மானம் சேத­ம­டைந்­துள்­ளது.

ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்­கெலின் தீவிர ஆத­ர­வா­ள­ரான வேனின் சாரதி, விமா­னத்தை புகைப்­படம் பிடிப்­ப­தற்­காக, வேனின் பிரேக்கை அழுத்­தாமல், வேனி­லி­ருந்து இறங்­கி­ய­தா­லேயே இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது.

ஏஞ்­சலா மேர்கெல் தலை­நகர் பேர்­லி­னி­லி­ருந்து ஜேர்­ம­னியின் டோர்மன்ட் நக­ருக்குச் சென்­றி­ருந்த நிலையில், டோர்மன்ட் விமான நிலை­யத்தில் நேற்­று ­முன்தினம் திங்­கட்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்ளது.

மேற்­படி வேன், டோர்மன்ட் விமா­ன­நி­லைய நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மா­ன­தாகும். விமான நிலை­யத்­துக்குள் பயன்­ப­டுத்­தப்­பட்ட அந்த வேனின் சார­தி­யாக பெண்­ணொ­ருவர் பணி­யாற்­றினார். அப்பெண் ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்­சலா மேர்­கெலின் தீவிர விசி­றி­யாவார். அவர் ஏஞ்­சலா மேர்­கெலின் விமா­னத்தைக் கண்­ட­வுடன் அதைப் புகைப்­படம் பிடித்­துக்­கொள்ள விரும்­பினார்.

இதற்­கான வேனி­லி­ருந்து வெளியே இறங்­கிய சார­தி­யான அப்பெண், வேனின் ஹேண்ட் பிறேக்கை பிர­யோ­கிக்க மறந்­து­விட்டார். இதனால், அந்த வேன் தானாக நகர்ந்து விமா­னத்­துடன் மோதி­யது.

இதனால், பொம்­பார்­டியர் குளோபல் 5000 ரகத்தைச் சேர்ந்த அவ்­வி­மா­னமும் வேனும் சேதமடைந்தன. இதையடுத்து, சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் பேர்லின் நகருக்குத் திரும்பினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo