‘மிஸ்டர் லோக்கல்’ ஜாலியான படம்- சிவ­கார்த்­தி­கேயன்

0 163

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள, ‘மிஸ்டர் லோக்கல்’ எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை 17 ஆம் திகதி வெளியா­கி­ற­து. சிவ­கார்த்­தி­கேயன், நயன்­தாரா, ரோபோ சங்கர், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்­ற­­போது சிவகார்த்திகேயன் பேசியதாவது :

‘ மிஸ்டர் லோக்கல்’ மிக எளிமையான, முழுக்க முழுக்க கொமடியான, ஜாலியான படம். சின்ன சின்ன விஷயங்கள் புதிதாக சேர்த்திருக்கிறோம்.

டிவியில் இருந்த காலகட்டத்திலேயே ராஜேஷின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.

எஸ்.எம்.எஸ்., படத்தில் “அடங்காபிடாரி…” பாடலில் ரஜினியின் “படையப்பா” வசனத்தை நான் தான் டப்பிங் பேசினேன்.

அப்போது இருந்தே அவருக்கும், எனக்கும் பழக்கம் உண்டு. ‘வருத்தப்படாத வாலிபர்’ சங்கம் படமும், ராஜேஷின் மூலமாகத்தான் எனக்கு வந்தது.

அதையடுத்து அவர் உடன் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டேன். அதற்கு சரியான நேரம் அமையவில்லை. ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் தான் அது அமைந்தது.

இப்படத்தின் பிளஸ், இதில் நடித்த நடிகர்கள் தான். ஏனென்றால் மக்கள் ரசிக்கிற நடிகர்கள் தான் நடித்துள்ளனர்.

‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரம் இல்லை என்ற கவலை இருந்தது.

அந்த கவலை ‘மிஸ்டர் லோக்கல்’ தீர்ந்தது. இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த படங்களில் கொமடி குறைவாக இருந்ததாக பலர் என்னிடம் கூறினார்கள். அந்தக்குறை இந்தப்படத்தில் தீரும். அனைவரும் குடும்பத்தோடு ஜாலியாக ரசிக்கிற படமாக இருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo