வரலாற்றில் இன்று மே 15 : 1988 ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேற ஆரம்பித்தன

0 137

1536: பிரித்­தா­னிய அரசி ஆன் பொய்லென் மீதான தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டு குறித்த வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யது.

1721: லண்­டனில் இயந்­திர துப்­பாக்கி தயா­ரிப்பு ஆரம்­ப­மா­கி­யது.

1800: பிரித்­தா­னிய மன்னர் 3 ஆம் ஜோர்ஜ் படு­கொலை முயற்­சி­யி­லி­ருந்து தப்­பினார்.

1811: ஸ்பெய்­னி­ட­மி­ருந்து பிரி­வ­தாக பர­குவே சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1918: சீன, ஜப்பான் இரா­ணுவ ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1904: ஜப்­பா­னிய கப்­ப­லான யஷிமா, ரஷ்ய கண்­ணி­வெ­டியில் சிக்­கி­யதால் 496 பேருடன் மூழ்­கி­யது.

1905: அமெ­ரிக்­காவில் களி­யாட்­டங்­க­ளுக்கு பிர­ப­ல­மான லாஸ் வேகாஸ் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1928: மிக்கி மௌஸ் கார்ட்டூன் பட வரி­சையின் முத­லா­வது படம் வெளி­யி­டப்­பட்­டது.

1929: அமெ­ரிக்­காவின் கிளீவ்லண்ட் நகரில் ஏற்­பட்ட தீ விபத்­தினால் 123 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1930: மொஸ்கோ நகரில் சுரங்க ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1930: கலி­போர்­னி­யா­வி­லி­ருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்றில் அலன் சர்ச் எனும் பெண் முதன் முத­லாக விமானப் பணிப்­பெண்­ணாக தொழில்­பு­ரிய ஆரம்­பித்தார்.

1937: கம்யூனிஸ்ட்­டு­களின் எதிர்ப்­புகள் கார­ண­மாக ஸ்பெய்ன் பிர­தமர் கபாவ்­லெரோ பதவி வில­கினார்.

1940: மெக்­டொ­னால்ட்ஸின் முத­லா­வது உண­வகம் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் திறக்­கப்­பட்­டது.

1940: 2ஆம் உலக யுத்­தத்தில் கடு­மை­யான சம­ருக்குப் பின்னர் ஜேர்­ம­னி­யிடம் நெதர்­லாந்து படை­யினர் சர­ண­டைந்­தனர்.

1945: யூகோஸ்­லா­வி­யாவில் ஜேர்­ம­னியின் கடைசிப் படை­யணி சர­ண­டைந்­தது.

1948: லெபனான், சிரியா, சவூதி அரே­பியா, ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படை­யெ­டுத்­தன.

1957: பிரிட்டன் தனது முதல் அணு­குண்டு பரி­சோ­த­னையை நடத்­தி­யது.

1958: சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 3 விண்கலத்தை ஏவி­யது.

1963: அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஜோர்டன் கூப்பர் விண்­வெ­ளிக்குச் சென்றார். ஒரு நாளுக்கு மேல் விண்­வெ­ளியில் தங்­கி­யி­ருந்த முதல் அமெ­ரிக்கர் இவ­ராவார்.

1970: அமெ­ரிக்­காவின் முத­லா­வது இரா­ணுவ பெண் ஜென­ரல்­க­ளாக அனா மாயீ ஹேய்ஸ், எலி­ஸபெத் பி. ஹொய்­சிங்டன் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர்.

1988: 8 வரு­டங்­களின் பின்னர் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து சோவியத் யூனியன் படைகள் வெளி­யேற ஆரம்­பித்­தன.

2008: அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் ஒரு பாலின திரு­மணம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

2010: அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த ஜெஸிகா வட்ஸன் எனும் 17 வயதான சிறுமி எங்கும் நிற்காமல் தனியாக உலகை சுற்றிவந்த மிக இளம் நபர் எனும் சாதனைக்குரியவரானார்.

2013: ஈராக்கில் மூண்ட வன்முறைகளினால் 3 தினங்களில் சுமார் 389 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo