யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

0 191

                                                                                        (மயூரன்)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
மாணவர்கள் உள்ளிட்ட மூவர் தொடர்பான வழக்கு நாளை (16) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ள நிலையில் சட்ட மா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் திலீபனின் படம் ஒட்டப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo