நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: இராணுவப் பேச்சாளர்

0 133

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று  தெரிவித்துள்ளனர்.

குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் திங்களன்று பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ‘தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாம் கைது செய்துள்ள நிலையில், கடந்த இரவு வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை’ என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை 80 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo