அல் – முஸ்தபா சர்வதேச பல்கலையின் பதுளைக் கிளையில் அரபு மொழியும் இஸ்லாமிய மதமும் திணிக்கப்படவில்லை!- மாணவர்கள் கருத்து

0 204

                                                                             (எம். செல்வராஜா)
அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைகழகத்தின் பதுளை மாவட்ட கிளை மூலம் அரசறிவியல் கற்கும் மாணவ மாணவிகளுக்கு அரபு மொழியும் இஸ்லாமிய மதமும் திணிக்கப்படவோ மதம் மாற்றங்களுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவோ இல்லை என அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைகழக மாணவ, மாணவிகள் உறுதியாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளனர்.
அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக பதுளை மாவட்ட கிளையின் நான்கு கற்கை நிலையங்களிலுமுள்ள மாணவவர்கள், முக்கியதஸ்தர்கள் பதுளை சமூக மேம்பாட்டு பணியகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தனர்.

‘எமது பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகும் இப்பல்கலைக்கழக பதுளை மாவட்ட கிளையில் 540 பேர் கல்வி கற்று வருகின்றோம். இன்னும் ஒரு வருடத்தில் பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து 540 தமிழ் ப் பட்டதாரிகள் உருவாகப் போகின்றனர். இதனை பெருந் சாதனையாகவும் எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவுமே நாம் கருதுகின்றோம். இதனை ஏற்படுத்திக் கொடுத்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். . அவர் எடுத்துக்கொண்ட பாரிய முயற்சியின் பயனாகவே 540 பேர் அடுத்த வருடத்தில் பட்டதாரிகளாக வெளிவரவுள்ளோம்.
அரபு மொழியையோ குர்ஆன் போதனைகளையோ கற்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அதனைக் கற்குமாறு எவருமே எம்மை நிர்ப்பந்திக்கவும இல்லை. கட்டாயப்படுத்தவுமில்லை.

அத்துடன் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயக் கோட்பாடுகளுடன் ஆங்கிலம் மற்றும் அரபு மொழியும் கற்பிக்கப்பட்டன. எமது முழு பாடநெறியில் ஓர் அத்தியாயம் மாத்திரமேயாகும். ஆனால், இவைகள் கட்டாய பாடங்களாக கருதப்படவில்லை. இப்பாடங்களை கற்பது அவர் அவர்களுக்கு விருப்பங்களுக்கமையவே இடம்பெறுகின்றன.

அப்படியே கற்பிப்பதாகயிருந்தாலும் மொழிகளையோ மதங்களையோ அறிவது, கற்பது, தெரிந்து கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. அதனை பிழையானதாக நாம் கருதவில்லை. இச்செயற்பாடானதுஇ எமக்கான மத அறிவியல்களை மேம்படுத்துவதாகவே அமையும். இது பல்வேறு வகையிலும் எமக்கு நன்மையே பயக்கும் என்றும் அவர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo