வன்முறையின்போது இராணுவ சீருடையில் காணப்பட்டவர் யார்?

0 758

                                                                                                                                   (ரெ.கிறிஷ்ணகாந்)

  இராணுவ ஊடகப் பேச்சாளர்         பிரிகேடியர் சுமித் அத்தபத்து 

நாத்தாண்டிய துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது இராணுவ சீருடையில் காணப்பட்ட நபரை அடையாளம் கண்டுகொள்வதற்காக இராணுவத்தினர், பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறை இடம்பெற்ற வேளையில் பாதுகாப்பு பிரிவினரின் சீருடையில் காணப்பட்ட குறித்த நபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அங்கு நிற்கின்ற காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது பல்வேறு ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இராணுவத்தினர் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் இராணுவத்தினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த காணொளிகளில் காணப்படும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் நபரை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் உதவிகோரப்பட்டுள்ளது.

விசாரணைகளின்படி, குறித்த நபர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்த ப்படுமாயின் அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவின் 011 -2 514 280 என்ற  தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு இராணுவப் பேச்சாளர், பிரிகேடிய சுமித் அத்தபத்து பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!