ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஏகமனதாகத் தீர்மானம்

0 312

                                                                                                                                     (இராஜதுரை ஹஷான்)

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  பொதுஜன பெரமுனவினர் முழுமையாக  ஆதரவு  வழங்குவோம்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள்    கையெழுத்திட்டுள்ள  நம்பிக்கையில்லா பிரேரணை    நாளை (16)   சபாநாயகரிடம் கையளிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது  என  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்   இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அமைச்சர் ரிஷாத்  பதியுதீனுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை   நிறைவேற்றப்பட வேண்டும்.   பாதிக்கப்பட்டுள்ள   மக்களின்  நம்பிக்கையைப் பாதுகாக்கும்   வகையில்  ஆளும் தரப்பினரும்  தற்போதைய நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

 நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில்   எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில்  முக்கிய  கலந்துரையாடல்  நடைபெற்றது.    சில   நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கையெழுத்திட்டு  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு   பொதுஜன பெரமுன சார்பில்  முழுமையான   ஆதரவை   வெளிப்படுத்தியுள்ளார்கள். இதன்போது ஏகமனதாக  நம்பிக்கையில்லா பிரேரணையை  முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo