‘ஆசிரியையைக் கத்தியால் குத்திய நபர்கள்; யாழ். சம்பவம் தொடர்பில் விசாரணை

0 154

(மயூரன்)

யாழ்.அராலி பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்­றுக்கு அருகில் வைத்து ஆசி­ரியை ஒருவர் மீது இருவர் கத்­தியால் குத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

அராலி பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்றில் கற்­பிக்கும் ஆசி­ரியை ஒருவர் நேற்றுக் காலை பாட­சா­லைக்கு சென்று கொண்­டி­ருந்த போது பாட­சா­லைக்கு அருகில் ஒழுங்கை ஒன்­றுக்குள் ஆசி­ரி­யை வழி­ம­றித்த இருவர் ‘மாண­வர்கள் இருவர் பாட­சா­லைக்கு செல்­லாது ஒழுங்­கைக்குள் நிற்­கி­றார்கள்’ எனக் கூறி­யுள்­ளனர்.

அத­னை­ய­டுத்து ஆசி­ரியை குறித்த ஒழுங்­கைக்குள் சென்ற போது பின் தொடர்ந்த இருவர் ஆசி­ரி­யையின் முதுகுப் பகு­தியில் கத்­தியால் குத்­தி­ய­துடன் அவரின் சங்­கி­லி­யையும் அப­க­ரிக்க முயன்­றுள்­ளனர்.

அதன்­போது சுதா­க­ரித்த ஆசி­ரியை அபயக் குரல் எழுப்­பி­ய­துடன் ஒழுங்­கைக்­குள்­ளி­ருந்து பிர­தான வீதியை நோக்கி ஓடி­யுள்ளார். அத­னை­ய­டுத்து தாக்­கு­த­லா­ளிகள் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

குறித்த சம்­ப­வத்தில் காய­ம­டைந்த ஆசி­ரியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டுள்­ள­துடன் சம்­பவம் தொடர்பில் வட்­டுக்­கோட்டை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo