டொனால்ட் ட்ரம்ப்பின் முகத்தோற்றம் பதிக்கப்பட்ட காலுறை அணிந்திருப்பதை ஜனாதிபதி ட்ரம்பிடம் காண்பித்த லூசியானா மாநில பிரதி ஆளுநர்

0 207

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முகத்­தோற்றம் பதிக்­கப்­பட்ட காலு­றை­களை தான் அணிந்­தி­ருப்­பதை ஜனா­தி­பதி ட்ரம்­பிடம் லூசி­யானா மாநில பிரதி ஆளுநர் காண்­பித்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது.

ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் லூசி­யானா மாநி­லத்­துக்கு நேற்­று­முன்­தினம் விஜயம் மேற்­கொண்டார். லேக் சார்ள்ஸ் நக­ரி­லுள்ள செனோல்ட் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தில் ஜனா­தி­பதி ட்ரம்ப் வந்­தி­றங்­கி­ய­வுடன், அவரை லூசி­யானா மாநில பிரதி ஆளுநர் பில்லி நுனன்­கேசர் மற்றும் பிர­முகர்கள் வர­வேற்­றனர்.

அப்­போது, தனது காலை மேலு­யர்த்­திய பிரதி ஆளுநர் பில்லி நுனன்­கேசர், ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முகத்­தோற்றம் பொறிக்­கப்­பட்ட காலுறை அணிந்­தி­ருப்­பதை ஜனா­தி­பதி ட்ரம்­புக்கு காண்­பி­த்தார்.

அக்­கா­லு­றை­களைப் பார்த்து ஜனா­தி­பதி ட்ரம்ப் வியப்­ப­டைந்­த­போ­திலும், அதை ஏற்­றுக்­கொண்­ட­வ­ராக, அக்­கா­லு­றையை சுட்­டிக்­காட்­டி­ய­வாறு போஸ் கொடுத்தார். டொனால்ட் ட்ரம்ப் சொக்ஸ் எனும் மேற்படி காலுறை 30 டொலர் ( சுமார் 5300 ரூபா) விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo