தயாராகின்றன ‘McVisa’, ‘McPassport’; ஆஸ்திரியாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் அமெரிக்கத் தூதரக கொன்சியூலர் சேவைகளை வழங்குகின்றன

0 144

ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள மெக்டொனால்ட்ஸ் உண­வ­கங்கள் அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளுக்­கான கொன்­சி­யூலர் சேவை­களை வழங்க ஆரம்­பித்­துள்­ளன.

கட­வுச்­சீட்டு தொலைந்­தமை, திரு­டப்­பட்­டமை, பிர­யாண உத­விகள் போன்ற விட­யங்­க­ளுக்­காக தூதரத்­துடன் இல­கு­வாக தொடர்­பு­கொள்­வ­தற்கு அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளுக்கு ஆஸ்­தி­ரிய மெக்டொனால்ட்ஸ் கிளைகள் உதவும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்ட மெக்டொனால்ட்ஸ் நிறு­வ­னத்­துக்கும், ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரத்­துக்கும் இடை­யி­லான புதிய பங்­காண்­மையின் கீழ் நேற்று புதன்­கி­ழமை முதல்­இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள எந்­த­வொரு மெக்டொனால்ட்ஸ் கிளையின் ஊழி­யர்­களும், தூத­ர­கத்­துடன் தொடர்­பு­கொள்­வ­தற்கு உத­வு­வார்கள் என ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் தெரி­வித்­துள்ளது.

ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள மெக்­டொனால்ட்ஸ் உண­வ­கங்­களில் மாத்­தி­ரமா இத்­த­கைய சேவை வழங்­கப்­ப­டு­கி­றது என்ற கேள்­விக்கு அத்­தூ­ரகம் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்­க­வில்­லை என ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி திட்­டத்தை பலர் வர­வேற்­றுள்­ளனர். அதேவேளை, இச்சேவைகளை (யள ‘‘McVisa’, (மெக்வீசா), ‘ McPassport’ (மெக்பாஸ்போர்ட்) என சமூக வலைத்தளங்களில் சிலர் வர்ணித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo