ஐ.சி.சி.யின் பொது மத்தியஸ்தர் குழுவில் முதல் பெண்ணாக லக் ஷ்மி நியமனம்

0 311

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை யின் போட்டி பொது மத்­தி­யஸ்­தர்­க­ளுக்­கான சர்­வ­தேச குழுவில் முத­லா­வது பெண் பொது மத்­தி­யஸ்­த­ராக (மெச் கொமி­ஷனர்) இந்­தி­யாவின் ஜீ.எஸ். லக்ஷ்மி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஆட­வ­ருக்­கான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் க்ளயார் பொலொஸ்க் முத­லா­வது பெண் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­றிய சில வாரங்­களில் ஆட­வ­ருக்­கான போட்டி ஒன்றில் பொது மத்­தி­யஸ்­த­ராக லக்ஷ்மி கட­மை­யாற்­ற­வுள்ளார்.

51 வய­தான லக்ஷ்மி, இதற்கு முன்னர் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்­டி­களில் போட்டி பொது­மத்­தி­யஸ்­த­ராக 2008இல் முதல் தட­வை­யாக பதவி வகித்­தி­ருந்தார்.

அத்­துடன் 3 மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் 3 மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார்.

‘‘சர்­வ­தேச பொது மத்­தி­யஸ்­தர்கள் குழு உறுப்­பி­ன­ராக என்னை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை நிய­மித்­துள்­ள­மை­யா­னது பெரும் கௌர­வத்தைக் கொடுக்­கின்­றது.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் புதிய திட்­டங்­களில் இதுவும் ஒன்­றாகும். இந்­தி­யாவில் கிரிக்கெட் வீராங்­க­னை­யா­கவும் பொது மத்­தி­யஸ்­த­ரா­கவும் நீண்­ட­காலம் சேவை­யாற்­றி­யுள்ளேன்.

இந்த அனு­ப­வங்­களைக் கொண்டு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் திற­மை­யாக செயற்­ப­டுவேன் என நம்­பு­கின்றேன்’’ என ஐ.சி.சி. அறிக்­கையில் லக்ஷ்மி குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது பொது மத்தியஸ்தராக கடமையாற்றுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!