மூதூர் மலையடிப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

0 233

                                                                        (தோப்பூர் நிருபர்)
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3 ஆம் கட்டை மலையடிப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) மாலை வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மூதூர் கட்டைபறிச்சான் 224 ஆவது படைப் பிரிவின் இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது டெட்டனேட்டர் – 62, வோட்டர் ஜெல் குச்சிகள் – 193, அமோனியம் – 50 கிலோ கிராம், 10 மீற்றர் நீளமுடைய வயர் றோல் – 50 போன்றன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கருங்கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo