இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்

0 140

(நா. தினுஷா)

இங்­கி­லாந்தின் லிவர்பூல் உள்­ளக அரங்கில் எதிர்­வரும் ஜூலை மாதம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை வலை­பந்­தாட்டக் குழாம், முன்­னோடி பயிற்சிப் போட்­டி­களில் பங்­கு­பற்று­ வ­தற்­காக பொட்ஸ்­வா­னா­வுக்கு எதிர்­வரும் 21ஆம் திகதி பய­ண­மா­க­வுள்­ளது.

அங்கு பொட்ஸ்­வானா தேசிய அணி­யுடன் 3 போட்­டி­க­ளிலும் இளையோர் அல்­லது கழக மட்ட அணி­யுடன் 3 போட்­டி­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ள­தாக அணி முகா­மை­யா­ளரும் இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் முன்னாள் தலை­வி­யு­மான ட்ரிக்ஸி நாண­யக்­கார தெரி­வித்தார். இப் போட்­டிகள் எதிர்­வரும் 23ஆம் திக­தி­முதல் 30ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

பொட்ஸ்­வானா செல்லும் இலங்கை வலை­பந்­தாட்ட வீராங்­க­னைகள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கான விமானப் பயணச் சீட்­டு­களை வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச வைபவ ரீதி­யாக நேற்று கைய­ளித்த வைபவம் செத்­சி­ரி­பா­யாவில் நடை­பெற்­றது.

ஆசிய வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னான இலங்கை வலை­பந்­தாட்ட அணி வீராங்­க­னை­க­ளுக்கு சொந்த வீடு­களை வழங்­கிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, அப்­போது வழங்­கிய உறு­தி­மொ­ழிக்கு அமைய பொட்ஸ்­வா­னா­வுக்­கான விமானப் பயணச் சீட்­டு­களை வழங்­கி­ய­தாக தெரி­வித்த ட்ரிக்ஸி நாண­யக்­கார, அதற்­காக அணி சார்பில் தனது நன்­றி­யையும் வெளி­யிட்டார்.

பொட்ஸ்­வான செல்லும் இலங்கை அணிக்கு சத்­து­ரங்கி ஜய­சூ­ரிய தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில்சார் கழக வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யா­டி­வரும் தர்­ஜினி சிவ­லிங்கம் விரைவில் நாடு திரும்பி இலங்கை அணி­யுடன் பொட்ஸ்­வானா பய­ண­மாவார்.

நான்கு குழக்­களில் 16 நாடுகள் பங்­கு­பற்றும் உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, வட அயர்­லாந்து, ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுடன் குழு ஏயில் இலங்கை இடம்பெறுகின்றது. உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் லிவர்பூலில் உள்ள இரண்டு உள்ளக அரங்குகளில் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo