ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சு உத்தரவு

0 113

ஈராக்­கி­லுள்ள சாதா­ரண அமெ­ரிக்க பணி­யா­ளர்­களை உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கும் ஈராக்கின் அண்டை நாடான ஈரா­னுக்கும் இடை­யி­லான பதற்றம் அதி­க­ரித்து வரும் நிலை­யி­லேயே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பாக்தாத் மற்றும் இர்பில் ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள அமெ­ரிக்க தூத­ரக ஊழி­யர்­க­ளையும் கூடி­ய­வரை விரை­வாக வெளி­யே­று­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

பிராந்­தி­யத்தில் ஈரா­னிய ஆத­ரவுப் படை­க­ளினால் அச்­சு­றுத்தல் அதி­க­ரித்­துள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ணுவம் நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்­தது.

குறித்த பிராந்­தி­யத்தில் அச்­சு­றுத்தல் அளவு அதி­க­ரிக்­க­வில்லை என தெரி­வித்­துள்ள பிரித்­தா­னிய ஜெனரல் ஒரு­வரின் கருத்­துடன் முரண்­பட்­ட­தாக இக் கருத்து அமைந்­தி­ருக்­கி­றது.

ஈராக் மற்றும் சிரி­யா­வி­லுள்ள ஈரா­னிய ஆத­ர­வி­லான போரா­ளி­க­ளிடம் இருந்து அமெ­ரிக்க படைகள் மற்றும் அவர்­க­ளது பங்­கா­ளி­களைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முற்­றிலும் திருப்­தி­யாக இருப்­ப­தாக இஸ்­லா­மிய இராச்­சியக் குழு­வுக்கு எதி­ரான உல­க­ளா­விய கூட்டுப் படை­களின் துணைத் தள­பதி கிறிஸ் கிகா கூறி­யுள்ளார்.

எனினும் அமெ­ரிக்கா மற்றும் அதன் கூட்டு உள­வுத்­துறை நிறு­வ­னங்­களால் நம்பகமான அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo