இலங்கை வளர்முக கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்

0 125

(நெவில் அன்­தனி)

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள இலங்கை வளர்­முக கிரிக்கெட் அணியின் பயிற்­றுநர் பதவி இலங்­கையின் முன்னாள் வேகப்­பந்­து­வீச்­சாளர் சமிந்த வாஸிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியின் பந்­து­வீச்சு பயிற்­று­ந­ராக செயற்­பட்டு வந்த சமிந்த வாஸ், அவிஷ்க குண­வர்­த­ன­வுக்கு பதி­லாக புதிய பத­வியில் அமர்த்­தப்­பட்­டுள்ளார்.

ஐக்­கிய அரபு இராச்­சிய கிரிக்கெட் சபையின் ஊழல்­மோ­சடி தடுப்­புக்­கான ஒழுக்கக் கோவையை அவிஷ்க குண­வர்­தன மீறி­ய­தாக ஐ.சி.சி. குற்­றஞ்­சாட்­டி­யதை அடுத்து அவிஷ்­கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் இடை­நி­றுத்­தி­யது.

இந்­நி­லையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறை­வேற்றுக் குழுவின் தீர்;மானங்­களில் ஒன்­றுக்கு அமைய இலங்கை வளர்­முக அணியின் தலைமை பயிற்­று­ந­ராக சமிந்த வாஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறி­வித்­துள்­ளது.

பயிற்­றுநர் துறையில் சமிந்த வாஸுக்கு போதிய அனு­பவம் இருப்­பதை அவர் வகித்த பத­விகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

2013 சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முதல் 2015வரை இலங்கை கிரிக்கெட் அணியின் பந்­து­வீச்சுப் பயிற்­று­ந­ராக கட­மை­யாற்­றிய சமிந்த வாஸ், அதன் பின்னர் அயர்­லாந்தின் பந்­து­வீச்சுப் பயிற்­று­ந­ராக செயற்­பட்டார். ஆனால், 2016இல் வேகப் பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் நிய­மிக்கப்­பட்டார். 2017இல் சம்­பக்க ராமநாயக்கவுக்குப் பதிலாக மீண்டும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டார். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo