கபில்தேவின் 36 வருட சாதனையை முறியடித்தார் இமாம் உல் ஹக்

0 296

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ப்றிஸ்டல், கவுன்டி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 151 ஓட்­டங்­களைக் குவித்த பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 36 வரு­டங்கள் நீடித்த சாதனை ஒன்றை முறி­ய­டித்­துள்ளார்.

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிகக் குறைந்த வயதில் 150 ஓட்­டங்­க­ளுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாத­னை­யையே இமாம் உல் ஹக் தனது 23ஆவது வயதில் நிலை­நாட்­டி­யுள்ளார்.

ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக 1983ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யின்­போது மிகவும் இக்­கட்­டான சூழ்­நி­லையில் அப்­போ­தைய இந்­திய அணித் தலைவர் கபில் தேவ் ஆட்­ட­மி­ழக்­காமல் 175 ஓட்­டங்­களைக் குவித்தார். அப்­போது அவ­ரது வயது 24 ஆகும்.

கபிலின் சாத­னையை முறி­ய­டித்த இமாம் உல் ஹக், இங்­கி­லாந்­துக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வர­லாற்றில் அதி­கூ­டிய ஓட்­டங்­களைப் பெற்ற பாகிஸ்­தா­னியர் என்ற சாத­னைக்கும் உரித்­தானார். அத்­துடன் சர்­வ­தேச ஒருநாள் அரங்கில் போட்டி ஒன்றில் அதிக ஓட்­டங்கள் பெற்ற பாகிஸ்­தா­னி­யர்கள் வரி­சையில் ஐந்தாம் இடத்தை வகிக்­கின்றார்.

பக்கார் ஸமான் (210 ஆ.இ. எதிர் ஸிம்­பாப்வே 2018), சயீத் அன்வர் (194 எதிர் இலங்கை 1997), இம்ரான் நஸிர் (160 எதிர் ஸிம்­பாப்வே 2007), ஷார்ஜீல் கான் (152 எதிர் அயர்­லாந்து 2016) ஆகியோரே இமாம் உல் ஹக்கை விட அதிக ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானியர்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo