எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள், விநியோகக் குழாய்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்- சவூதி குற்­றச்­சாட்டு

0 105

தமது இரண்டு எண்ணெய்த் தாங்­கிக் கப்பல்கள் மற்றும் பாரிய குழாய்கள் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­கு­தல்கள், உல­க­ளா­விய எண்ணெய் விநி­யோ­கத்தை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக உலகின் பாரிய மசகு எண்ணெய் ஏற்­று­ம­தி­யா­ள­ரான சவூதி அரே­பியா நேற்று தெரி­வித்­துள்­ளது.

இரண்டு சவூதி கப்­பல்கள் உள்­ளிட்ட நான்கு எண்ணெய் கப்­பல்கள் மீது கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து சவூ­தியின் பிர­தான எண்ணெய்க் குழாய்­களில் ஒன்றின் மீது, நேற்று முன்­தினம் மேற்­கொள்­ளப்­பட்ட ட்ரோன் தாக்­கு­தல்­க­ளுக்கு, ஈரா­னுடன் இணைந்த யேம­னிய போரா­ளிகள் உரிமை கோரி­யுள்­ளனர்.

“இந்த பயங்­க­ர­வாத மற்றும் சதி நட­வ­டிக்­கைகள் சவூதி அரே­பி­யாவை மட்டும் இலக்கு வைக்­க­வில்லை. உல­க­ளா­விய எண்ணெய் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளையும் உலக பொரு­ளா­தா­ரத்­தையும் இலக்கு வைத்­துள்­ளது என்­பதை அமைச்­ச­ரவை வலி­யு­றுத்­து­கி­றது” என சவூதி தெரி­வித்­துள்­ளது.

ஹோர்முஸ் நீரிணை வழி­யி­லான வளை­குடா பிராந்­திய சவூதி ஏற்­று­ம­தி­க­ளுக்­கான வழிகள் மூடப்­பட்­டி­ருந்தால், மாற்று மூலோ­பாய வழி­களை வழங்­கக்­கூ­டிய, நாளொன்­றுக்கு ஐந்து மில்­லியன் பெரல்கள் மசகு எண்­ணெயை கொண்டு செல்­லக்­கூ­டிய, கிழக்­கு–­மேற்கு எண்ணெய்க் குழாய்கள் மீதே செவ்­வாய்க்­கி­ழமை ட்ரோன் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பாக ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் சவூதி அரே­பி­யா­வுடன் இணைந்து அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து சர்­வ­தேச விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய அரபு இராச்­சிய அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் அதி­க­ரித்து வரும் பதற்ற நிலை தொடர்­பாக தாம் அவ­தானம் செலுத்தி வரு­வ­தாக ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. “இவ் விடயம் தொடர்பில் பதற்றம் அதி­க­ரித்து வரு­வது தொடர்பில் நாம் அவ­தா­னித்து வரு­கிறோம்” என ரஷ்ய செய்தித் தொடர்­பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை, யேமன் அரசு யேம னிய போராளிகள் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் ஈரா னிய அரசின் கருவிகளாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo