பல்கலை மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துனர் பிணையில் விடுவிப்பு!

0 160

                                                                                                  (மயூரன்)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று (16) மாணவர்கள் இருவரும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார்  நீிதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்போது, ‘மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல. அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பதே எமது நோக்கமாகும். பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் மாணவர்கள் இருவரும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று’ அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிமன்று மூவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo