ஒய்ன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை; பெயார்ஸ்டோவுக்கு கடும் எச்சரிக்கை

0 105

இங்கிலாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கனுக்கு அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ப்றிஸ்டல் விளையாட்டரங்கில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றியீட்டிய போட்டியில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 50 ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய குற்றத்துக்காக அவருக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போட்டி ஊதியத்தில் 40 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பெப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டி ஒன்றின்போதும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 50 ஓவர்களை நிறைவு செய்ய மோர்கன் தவறியிருந்தார்.

12 மாதங்களுக்குள் இரண்டாவது தடவையாக ஒரே தவறை இழைத்ததன் காரணமாக அவருக்கு ஒரு போட்டித் தடையும் 40 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டியில் 50 ஓவர்களை நிறைவு செய்ய இங்கிலாந்து கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்களை செலவிட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.

இதேவேளை, பாகிஸ்தானுடனான போட்டியில் 29ஆவது ஓவரில் ஆட்டமிழந்த ஆத்திரத்தில் துடுப்பால் விக்கெட்களை தகர்த்த ஜொனி பெயார்ஸ்டோவுக்கு ஒழுக்காற்று விதிகளின் கீழ் ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo