ஹொரணை, நாரகல பாலத்துக்கு கீழாக சடலம் மீட்பு

0 72

ஹொரணை நாரகல பிரதேசத்தில் பாலமொன்றுக்கு கீழாக களுகங்கையிலிருந்து இன்று (16) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக புளத்சிங்ஹல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளத்சிங்ஹல பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய, இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பாலத்துக்கு அருகிலிருந்து பாதணி சோடிகளும், சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம்; உறுதிப்படுத்தப்படாத நிலையில் புளத்சிங்ஹல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடு த்துள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!