மென்செஸ்டர் சிட்டிக்கு சம்பியன்ஸ் லீக் தடைவிதிக்க ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் பரிந்துரைக்குமா?

0 82

குழு­வினர் பரிந்­துரை செய்­யலாம் என அமெ­ரிக்க பத்­தி­ரிகை ஒன்றில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. மென்­செஸ்டர் கழ­கத்தின் செல­வின கட்­டுப்­பாடு ஒழுங்­கு­ப­டுத்தல் விதி­களை மென்செஸ்டர் சிட்டி கழகம் மீறி­யுள்­ளமை தொடர்­பாக எழுந்த சந்­தே­கத்தை அடுத்து ஐக்­கிய ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கத்தின் நிதி கட்­டுப்­பாட்டுச் சபை விசா­ரணைக் குழு­வினர் நிலை­மையை உன்­னிப்­பாக ஆராய்ந்து வரு­கின்­றனர்.

 

பெல்­ஜி­யத்தின் முன்னாள் பிர­தமர் ஈவ்ஸ் லெட்­டேர்மி தலை­மை­யி­லான இக் குழு­வினர் இவ் வார இறு­திக்குள் தமது விசா­ரணை முடிவை அறி­விப்பர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் அடுத்த பரு­வ­கா­லத்­துக்­கான (2020-–2021) ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக்கில் பங்­கு­பற்ற முடி­யா­த­வாறு மென்­செஸ்டர் சிட்டி கழ­கத்­துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்­து­ரையை இக் குழு­வினர் சமர்ப்­பிப்­பரா என்­பது உறு­தி­படத் தெரி­ய­வ­ர­வில்லை.

இதே­வேளை, தமது கழ­கத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் ஜேர்மன் சஞ்­சிகை திட்­ட­மிட்டு செய்­தியை திரி­பு­ப­டுத்தி வெளி­யிட்­டுள்­ள­தாக மென்செஸ்டர் சிட்டி கழகம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ஆங்கிலேய ப்றீமியர் லீக் போட்டிகளில் மென்செஸ்டர் சிட்டி ஒரு புள்ளி வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo