பெயார்ஸ்­டோவின் சதத்தின் உத­வி­யுடன் பாகிஸ்­தானை பதம்­பார்த்­தது இங்­கி­லாந்து; இமாம் உல் ஹக்கின் சதம் வீண்­போ­னது

0 48

ப்றிஸ்டல், கவுன்டி விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்­தா­னினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 359 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து, ஜொனி பெயார்ஸ்­டோவின் அபார சதத்தின் உத­வி­யுடன் 6 விக்­கெட்­களால் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்­றது.

இந்த வெற்­றி­யுடன் ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரில் 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்­கி­லாந்து முன்­னிலை வகிக்­கின்­றது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட பாகிஸ்தான், ஆரம்ப வீரர் இமாம் உல் ஹக்கின் அதி­ரடி சதத்தின் உத­வி­யுடன் 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­களை இழந்து 358 ஓட்­டங்­களைக் குவித்­தது.

ஆனால், பெயார்ஸ்­டோவின் சதம், முன்­வ­ரிசை மற்றும் மத்­திய வரிசை துடுப்­பாட்ட வீரர்­களின் சிறந்த துடுப்­பாட்­டங்­களின் பல­னாக இங்­கி­லாந்து 44.5 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 359 ஓட்­டங்­களைப் பெற்று மிக இல­கு­வாக வெற்­றி­பெற்­றது.

பாகிஸ்­தானின் துடுப்­பாட்­டத்தில் ஆரம்ப வீரர் இமாம் உல் ஹக் 131 பந்­து­களில் 16 பவுண்ட்­றிகள், ஒரு சிக்­ச­ருடன் 151 ஓட்­டங்­க­ளையும் அசிப் அலி 512 ஓட்­டங்­க­ளையும் ஹரிஸ் சொஹெய்ல் 41 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

எவ்­வா­றா­யினும் இமாம் உல் ஹக்கின் சதம் இங்­கி­லாந்து துடுப்­பாட்ட வீரர்­களின் திற­மையால் பய­னற்றுப் போனது.
இமாம் உல் ஹக், அசிப் அலி ஆகிய இரு­வரும் ஐந்­தா­வது விக்­கெட்டில் 90 பந்­து­களில் பகிர்ந்த 125 ஓட்­டங்­களே பாகிஸ்­தானின் மொத்த எண்­ணிக்­கைக்கு வலு­சேர்ப்­ப­தாக அமைந்­தது.

இங்கிலாந்து பந்­து­வீச்சில் க்றிஸ் வோக்ஸ் 67 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் டொம் கரன் 74 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

இங்­கி­லாந்து பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது ஆரம்ப வீரர்­க­ளான ஜொனி பெயார்ஸ்­டோவும் ஜேசன் ரோயும் 17.3 ஓவர்­களில் 159 ஓட்­டங்­களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்­பத்தை இட்­டுக்­கொ­டுத்­தனர். பெயார்ஸ்டோ 93 பந்து­களை எதிர்­கொண்டு 15 பவுண்ட்­றிகள், 5 சிச்­கர்­க­ளுடன் 128 ஓட்­டங்­க­ளையும் ஜேசன் ரோய் 55 பந்­து­களில் 8 பவுண்ட்­றிகள், 4 சிக்­சர்­க­ளுடன் 76 ஓட்­டங்­க­ளையும் குவித்­தனர்.

இவர்­களை விட மொயின் அலி 36 பந்­து­களில் ஆட்­ட­மி­ழக்­காமல் 46 ஓட்­டங்­க­ளையும் ஜோ ரூட் 36 பந்­து­களில் 43 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் சுமாரான வேகத்தில் பெற்று இங்கிலாந்தின் வெற்றிக்கு பங்காற்றியிருந்தனர். ஆட்டநாயகன்: ஜொனி பெயார்ஸ்டோ

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo