உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான இந்­திய அணி போதிய பலம் கொண்­டது- ரவி ஷாஸ்­திரி

0 88

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான இந்­திய அணி போதிய பலத்­துடன் இருப்­ப­தாக அதன் தலைமை பயிற்­றுநர் ரவி ஷாஸ்­திரி தெரி­வித்தார். நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா உட்­பட 10 அணிகள் பங்­கேற்கும் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்­திலும் வேல்­ஸிலும் எதிர்­வரும் 30ஆம் திக­தி­ முதல் ஜூலை 14ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

உலகக் கிண்­ணத்­துக்­கான தனது ஆரம்ப லீக் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை ஜூன் மாதம் 5ஆம் திகதி எதிர்த்­தா­ட­வுள்­ளது.
இன்னும் 14 தினங்­களில் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள இந்­திய அணி குறித்து பேசிய அவர், ‘‘உலக கிண்ணப் போட்­டிக்­கான இந்­திய அணி போதிய பலத்­துடன் உள்­ளது.

எமது அணியில் சிறந்த புரிந்­து­ணர்வும் நெகிழ்ச்சித் தன்­மையும் தாரா­ள­மாக இருக்­கி­றது. அணியின் துடுப்­பாட்ட வரி­சையில் நான்காம் இலக்­கத்தில் யார் துடுப்­பெ­டுத்­தாடப் போகி­றார் என பலர் மத்­தியில் கேள்வி நில­வலாம். எமக்கு அது குறித்து கவ­லைப்படத் தேவை­யில்லை. ஏனெனில், நான்காம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தாட வல்ல வீரர்கள் தாரா­ள­மாக இருக்­கின்­றனர்.

குழாத்தில் இடம்­பெறும் 15 வீரர்­களும் எந்த சந்­தர்ப்­பத்­திலும், எந்த நிலை­யிலும் களம் இறங்கத் தயா­ராக இருக்­கி­றார்கள்’’ என்றார்.‘‘ஒரு­வேளை வேகப்­பந்து வீச்­சாளர் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டாலும் மாற்று வேகப்­பந்து வீச்­சாளர் தயார் நிலையில் இருக்­கிறார்.

ஐ.பி.எல். போட்­டி­யின்­போது காயம் அடைந்த கேதர் ஜாத­வுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்­ப­டா­தது நல்ல விஷ­ய­மாகும். அவ­ரது உடல் தகு­தியை பரீட்­சிக்க போதிய காலம் இருக்­கின்­றது’’ எனவும் அவர் குறிப்­பிட்டார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி யில் பங்­கு­பற்­று­வ­தற்­காக இந்­திய கிரிக்கெட் குழாம் எதிர்வரும் 22ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது. அப்போது இறுதி 15 வீரர்கள் யார் என்பது உறுதியாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo