கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ் இராஜினாமா!

0 687

                                                                                                                      (அஸ்லம் எஸ்.மௌலானா)

சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்

கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று (16) கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்பிடம் கையளித்துள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு மருதமுனை வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், மேலதிக பட்டியல் மூலம் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வினால் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் எந்தவொரு வட்டாரத்திலும் வெற்றி பெறாதபோதிலும் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தை பெற்றிருந்தது.

தற்போது ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் சுழற்சி முறையில் கட்சியின் மற்றொரு வேட்பாளருக்கு இடமளிப்பதற்காகவே ச ஏ.எல்.எம்.றிபாஸ், மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.ஜி.எம்.நதீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் வை.கே.ரஹ்மான் ஆகியோரூம் இதே அடிப்படையில் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தனர். இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையில் தற்போது மூன்று உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo