கம்பளையில் ஆஸி யுவதி மீது பாலியல் பலாத்கார முயற்சி!

0 356

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா முகவரான 22 வயது யுவதி மீது பாலியல் பலாத்காரம் புரிய முயற்சித்த ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவத்தின் போது காயங்களுக்குள்ளான குறித்த யுவதியும் சுற்றுலா விடுதி உரிமையாளரும் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கம்பளை நில்லம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நபருக்குச் சொந்தமான சுற்றுலா விடுயை பார்வையிடும் நோக்கில் குறித்த யுவதி வந்துள்துடன் குறித்த விடுதியின் சூழலை பார்பதற்காக விடுதி உரிமையாளருடன் சென்ற சந்தர்ப்பத்தில் மது அருந்திய நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், குறித்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது யுவதியின் உடலைச் சந்தேக நபர் பல இடங்களில் கடித்ததால் யுவதியை சந்தேக நபரிடமிருந்து காப்பாற்ற போராடியதன் காரணமாக விடுதி உரிமையாளரும் காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்தச் சம்பவம் குறித்து கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo