வடமேல் மாகாண பாதுகாப்பில் 5500 பொலிஸார்: மேலதிகமாக முப்படையினர்!

0 165

வடமேல் மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5500 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த நாட்களில் வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு; மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, முப்படையினரது ஒத்துழைப்புக்கள் பாரியளவில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரதும் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo