ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வு அதிகாரி மீண்டும் பணியில்: ஊடகவியலாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் என்கிறது CPJ

Alarm over Sri Lanka reinstating major accused of journalist murder

0 95

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும்; இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்தையை மீண்டும் பணியில் ஈடுபடுத்தியிருப்பது இலங்கை ஊடகங்களுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு (CPJ -சி.பி.ஜே.) தெரிவித்தள்ளது.

ஊடகவியலாளர்கள் பலர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மேஜர் பிரபாத் புலத்வத்தை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், தற்போது அவர் மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அவர் மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊடகவிலாளர் ஒருவரின் கொலை மற்றும் இரு ஊடகவியலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்ட புலனாய்வு அதிகாரி ஒருவரை மீண்டும் கடமையில் ஈடுபடுத்துவதானது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்கு எதிராக போராடுவதாக இலங்கை கூறுவதற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என சி.பி.ஜே.யின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo