ரிஷாத் , ஹிஸ்புல்லாஹ் இருவரையும் கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

0 521

                                                                                                                                       (எம்.மனோசித்ரா)
ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழு வணிக, கைதொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரைக் கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியும். இவ்வாறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டவர்களைப் போல் இன்னும் 150 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களிலிருந்தும் வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்படுகின்றன. எதற்காக இவ்வாறு ஆயுதங்களை வைத்திருக்கின்றார்கள் என்றும் புரியவில்லை.

ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலிலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது (விபரமான செய்தி நாளை (17) மெட்ரோ நியூஸில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo