வரலாற்றில் இன்று மே 16 : 1929 ஒஸ்கார் விருது வழங்கல் ஆரம்பம்

0 117

1812: ரஷ்­யா­வுக்கும் துருக்­கிக்கும் இடை­யி­லான 6 வரு­ட­கால யுத்தம் முடி­வுற்­றது.

1868: அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட் ஜக்ஸன் குற்­ற­வியல் பிரே­ரணை விசா­ர­ணையில் ஒரு மேல­திக வாக்­கினால் நிர­ப­ரா­தி­யாக காணப்­பட்டார்.

1891: ஜேர்­ம­னியின் பிராங்பேர்ட் நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்­றின்­போது முதல் தட­வை­யாக நீண்ட தூரத்­துக்கு உயர் அழுத்த மின்­சாரம் விநியோ­கித்துக் காட்­டப்­பட்­டது.

1811: அல்­பியூரா யுத்­தத்தில் ஸ்பெய்ன், போர்த்­துக்கல், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து பிரான்ஸை தோற்­க­டித்­தன.

1929: ஹொலிவூட்டில், அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் எனும் அமைப்­பினால் முத­லா­வது சினிமா விருது வழங்கல் விழா நடத்­தப்­பட்­டது. இது பின்னர் ஒஸ்கார் விருது என அழைக்­கப்­பட்­டது.

1951: அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துக்­கூ­டான முத­லா­வது வழக்­க­மான விமான சேவை நியூயோர்க், லண்டன் நக­ரங்­க­ளுக்­கி­டையில் “எல் அல் இஸ்ரேல் எயார்லைன்ஸ்;” நிறு­வ­னத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1960: ரூபி லேசர் எனும் லேசர் செயல்­முறை முதல் தட­வை­யாக செய்­து­ காட்­டப்­பட்­டது.

1961: தென் கொரி­யாவில் லெப்­டினன்ட் ஜெனரல் தோயங் சாங் தலை­மையில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி போசன் யுன் கைது செய்­யப்­பட்டார்.

1975: எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சியை அடைந்த முதல் பெண் எனும் பெரு­மையை ஜப்­பானைச் சேர்ந்த ஜூன்கோ தபேய் பெற்றார்.

1975: சிக்கிம் ராஜ்­ஜி­யத்தில் நடை­பெற்ற அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்பை அடுத்து அதை தனது மாநி­லங்­களில் ஒன்­றாக இந்­தியா இணைத்­துக்­கொண்­டது.

1983: சூடா­னிய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சூடான் மக்கள் விடு­தலை இரா­ணுவம் எனும் அமைப்பின் கிளர்ச்­சி­யா­ளர்கள் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தனர்.

1991: அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் பிரித்­தா­னிய அரசி 2 ஆம் எலி­ஸபெத் உரை­யாற்­றினார். பிரித்­தா­னிய மன்னர் அல்­லது அரசி அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யமை இதுவே முதல் தடவை.

2003: மொரோக்­கோவில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களில் 33 பேர் பலி­யா­கினர்.

2005: குவைத் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் வாக்களிப்பதற்கு அந்நாட்டு பெண்களுக்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டது.

2011: நாசாவின் எண்டேவர் விண்வெளி ஓடம் தனது கடைசி விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo